வந்தோம், பார்த்தோம், கொலை செய்தோம்

துரும்பர் அவதரித்து விட்டார். விருப்பமோ விருப்பமில்லையோ வந்துதித்து விட்டார். இனி வணங்காமல் விட முடியாது. அவர் வரக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாகவிருந்தன  ஊடகங்கள். அவர் வரவே மாட்டார்,

Read more

பெரும் படம் பார்த்தல்

துரும்பரைப்  பற்றி எழுத ஆரம்பித்ததிலிருந்து எனது நட்பு வட்டம் சுருங்கிக்கொண்டு போகிறது என்பதை ஒத்துக்கொண்டே  ஆகவேண்டும் . துரும்பர் விடயத்தில் எனது பார்வை, அவதானிப்பு, நோக்கம் என்பன

Read more

கனடாவின் அவமானம்

2011 ஜூன் மாதம் சிண்டி கிளாடியூ என்னும் 36 வயதுடைய பெண் கனடாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான எட்மன்ரனில் உள்ள ஓட்டல் அறையொன்றில் குளியற்தொட்டியொன்றில் இறந்திருந்தாள். அதிகப்படியான இர்த்த ஓட்டமே மரணத்திற்குக் காரணம் என மரண அதிகாரியின் தீர்ப்பு அமைந்திருந்தது. சிண்டியின் மரணம் ஒரு கொலை எனக் கூறி அக் கொலையைச் செய்தவரென ஒன்ராறியோவைச் சேர்;ந்த ட்ரக் சாரதியான ப்ராட் பார்ட்டன் கைது செய்யப்பட்டு வழக்குத்தொடரப்பட்டது. இந்த மார்ச் மாதம் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. பார்ட்டன் குற்றவாளியல்லவென அறிவிக்கப்பட்டது. இச் சம்பவம் பற்றிய செய்திகள் பல வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு ஊடகங்களில் வெளிவந்த போதும் அவை இரக்க நரம்புகளை மெதுவாக வருடிச் சென்றதோடு அவைவழக்கம் போல் அன்நியப் பெருவெளிக்குள் அடக்கம் கொண்டுவிட்டன. இன்று (மார்ச் 31) இச் செய்தி  சி.பி,சி. வானொலியில் அனா மரியா ட்றெமொன்ரி யினால் அலசப்பட்டபோது தான் செய்தியின் முன் புலம் பின் புலங்கள் எல்லாம் சேர்ந்து எனதுமூர்க்க நரம்புகளைப் புடைத்தெழச் செய்தன. சிண்டி ஒரு கனடிய சுதேசியப் பெண். இரண்டு குழந்தைகளுக்குத் தாய். பாலியல் தொழிலாளி. கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் செய்தவர் ஒரு வெள்ளை இனத்தவர். தீர்ப்பு கொலைக் குற்றம் சாட்டப்பட்டவருக்குச்  சாதகமாக அமைந்ததா அல்லது இறந்துபோன சிண்டிக்கு நீதி கிடைக்கவில்லையா என்ற வாதப் பிரதி வாதஙகள் ஒருபுறமிருக்கட்டும். என் நரம்புகளைப் புடைத்தெழச் செய்த விடயம் வழக்காடப்பட்ட நீதிமந்றத்தில் நடைபெற்ற சம்பவம்தான். கனடிய சுதேசிகள் மீது பல நூற்றாண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவழிப்பு இப்போதைக்கு நின்றுவிடப் போவதில்லை என்பதற்கு சிண்டியின் மரணம் புதிதாக நாட்டப்பட்ட இன்னுமொரு மைல் கல் என்பதற்கு இந்த நீதிமன்றம் பட்டயம் எழுதி வைத்திருக்கிறது. சிண்டியின் மரணம் மிகுதியான இரத்த ஓட்டத்தினால் நடைபெற்றிருக்கிறது என்பதைச் சொல்ல சாட்சியங்களின் அவசியம் இருந்திருக்காது. சிண்டியின் பிறப்புறுப்பிணுள்மெல்லிழையம் (tissue) வெடித்ததன் காரணமாக இரத்த ஓட்டம் ஏற்பட்டது என்பதையும் மருத்துவ அதிகாரிகள் ‘ஐயம் திரிபுற’ நிரூபித்துமிருக்கலாம். இழைய வெடிப்புக்குக்காரணம் முரட்டுக் கலவி (rough sex) என்பதையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுவிட்டது. ஆனாலும் அதற்குக் காரணமானவர் குற்றமேதும் இழைக்கவில்லை என நீதிமந்றம்தீர்ப்பளித்தால் குற்றம் சிண்டியின் மீதுதானே! சரி அதை விடுங்கள். உலகத்தில் எத்தனை கொலைகள் நடைபெற்றிருக்கின்றன. எந்தவொரு நாட்டிலாவது கொலை செய்யப்பட்டவர் இவர்தான் என நிரூபிப்பதற்கு கொலைசெய்யப்பட்டவரின் தலையைக் கொய்து  நீதிமந்றத்துக்குக் கொண்டு வந்து ஜூரர்கள் முந்நிலையில் காட்சிப் பொருளாக வைப்பார்களா? கனடா எப்படிப்பட்ட நாடு. நாகரீகத்தின் உச்சியில் இருக்கும் நாடு. இங்குள்ள ஒரு நீதிமந்றத்தில் ஜூரர்கள் முந்நிலையில் காட்சிப் பொருளாக அன்நாட்டின் உரிமைக்காரப்பெண்ணின் பிறப்புறுப்பை அரிந்து கொண்டுவந்து காட்டியிருக்கிறார்கள். முரட்டுக் கலவியால் இழையம் கிழிந்து மரணமானாள் எனக் காட்டுவதற்கு இத்தனை நடவடிக்கை! தூரதேசமொன்றில் சுய இன்பத்திற்காகக் கொலைக்களம் சென்று கொலையுண்டு வருகின்ற இராணுவத்தினனுக்கு கொடி போர்த்தி ஊர்வலம் செய்யும் இந்த நாட்டில் ஒரு சுதேசிப்பெண் ‘குற்றவாளி’ என்பதை நிரூபிக்க கனடாவின் நீதித்துறை பெரும்பாடு பட்டிருக்கிறது! (இந்த இடத்தில் செருகக்கூடிய ஒரு கொசிறு: சில நாட்களின் முன் முகநூலில் ஒருஇலங்கைப் பெண் குமுறியிருந்தார். கனடா ஒரு சுவர்க்க பூமி. பிறந்த நாட்டில் நான் ஒரு மாமிசத் துண்டாகவே நடத்தப்படுவதுண்டு என்று. இக்கரை madam க்கு அக்கரை சிவப்புத்தான்) இந்த வழக்கில் ஜூரர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் யாரென்று நிநைக்கிறீர்கள்? 8 பேர் வெள்ளை இனத்தவர். ஒருவர் கறுப்பிநத்தவர். மற்றவர் மஞ்சள் இனத்தவர். சுதேசியர்எவருமில்லை. இதுபற்றி வழக்குத் தொடுநரிடம் அனா மரியா வினவியபோது அவர் சொன்ன பதில் சுதேசியர்களை ஜூரர்களாக நியமித்தால் அவர்கள் முற்சாய்வோடு (bias) தீர்ப்பளித்துவிடலாம் என்பதற்காகவே அப்படி நியமிக்கவில்லை என்பதாக இருந்தது. சுதேசிகளின் சமூகத்தில் சின்டியின் கொலை ஆச்சரியத்தைத் தருமென்பதற்கு ஆதாரங்கள் இல்லை. 1980 முதல் 2013 ஆண்டு வரையில் 1017 பெண்கள் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். 164 பெண்கள் காணாமற் போயிருக்கிறார்கள். மனிற்றோபா மானிலத்தில் இக் காலகட்டத்தில் கொலை செய்யப்பட்டவர்களில் 49% சுதேசிப் பெண்கள்.

Read more

ஒபாமா

ஒபாமாவின் ஆட்சி முடிவுக்கு வந்தது பற்றிப் பலருக்குக்  கவலை.  அவர் ஒரு கண்ணியவான், நீதிமான், ஏழைபங்காளன், சமாதானம் விரும்பி என்று பலரும் பூ மழை பொழிகிறார்கள். அவர்

Read more

முக்கோண சூத்திரம்

காரியங்கள் காரணமில்லாமல் நடைபெறுவதில்லை என்பதில் மிகவும் உறுதியான நம்பிக்கை எனக்குண்டு. வரலாற்றுத் தடயங்கள் இதற்கு  நிறைய ஆதாரங்களைத் தந்துள்ளன. அந்த நம்பிக்கையில் கடந்து போன ஆண்டும்,  வந்திருக்கும்

Read more

இவரும் அவர்தானா?

எதிரிகளால் வரும் ஆபத்துக்களை விட எதிர்பாராமல் நண்பர்களிடமிருந்து வரும் ஆபத்துக்களே அதிகம் என்று பலரும் பல தடவைகள் அனுபவித்து எழுதியிருக்கிறார்கள். இதில் அழுது கொட்டுவதற்கு எதுவுமில்லை. அரசியலில்

Read more

செவ்வாற்றுக் கடமை

சென்ற வாரம் செவ்வாற்றில் இரண்டு திருவிழாக்கள் கொடியேறின. நான் சொல்வது இசுக்காப்ரோவின் ரூஜ் றிவர் பகுதியை. (பிரஞ்சு மொழியில் ரூஜ்=சிவப்பு). செவ்வாறு தமிழ்க் கனடியர்களின் தலைநகரம் என்பதில்

Read more

துரும்பரின் அவதாரம்

அவர் வருவாரா? வருவார் என்கிறார்கள். உலகத்தில் அதர்மம் ஓங்குகின்றபோது தர்மத்தை நிலை நாட்ட அவர் வருவதுண்டு. உலகில் பல காலங்களில் பலரும் ‘நான் தான் அவர்’ என்று கூறி அவதாரம்

Read more

இது ஒரு விழாக் காலம்

சென்ற வாரம் ஒரு விழாவுக்கு அழையா விருந்தாளியாகப் போக நேரிட்டது. ஆங்காங்கு வட்ட மேசைகள் பலகாரங்களோடு மின்னிக் கொண்டிருந்தன. அதற்காகப் பலகாரங்கள் வைரத்தோடுகளோடு அமர்ந்திருந்ததாக நம்பிவிட வேண்டாம்.

Read more

றொப் போர்ட் – ரொறோண்டோவின் மக்கள் திலகம்

பலருக்கு இது விசனமாகவே இருக்கும். ஆனால் நான் மதிக்கும் மனிதருள் ரொறொண்டோவின் முன்னாள் நகர பிதா றொப் போட்டும் ஒருவர். இந்த வாரம் அவரது உடல் ரொரொண்டோ

Read more

Enjoy this blog? Please spread the word :)