எம்மைப் பற்றி

The happiestman

மறுமொழி

பரஸ்பரம் உணர்வுகளை மொழி வழியாகப் பரிமாறுவதற்கான இடம். கருத்துக்கள் உவப்பானவையாக இல்லாவிட்டாலும் நாகரீகமானவையாக இருந்தாலே போதும்.

சொல்லுங்கள் கேட்கிறோம்.

மறுமொழியின் கதை

1996 இல் சஞ்சிகையாக ஆரம்பித்தது. நான்கு இதழ்களுடன் மூடி விட்டது. பின்னர் மின்னிதழாக அவ்வப்போது முகம் காட்டிக் கொண்டிருக்கிறது.

இலக்கியம், சமூகம் என்று தம் வாழ்வைப் பினைந்து கொண்டிருக்கும் பலருக்கு உள்ள அதே வியாதி தான். ஆர்வக் கோளாறு. மருந்துகள் பயனளிக்காது.

எவரையும் திருத்துவது இதன் நோக்கமல்ல. எல்லா மனிதருள்ளும் இருக்கும் மனச் சாட்சியைத் தட்டி எழுப்பினாலே போதும். அதற்கு நல்லது கெட்டது தெரியும். வகுப்பு எடுக்கத் தேவையில்லை. அவ்வளவு தான்.

ஓடு மட்டும் ஓடுவோம்..

 

எமது பிரசுரங்கள்

மறுமொழி இணைய சஞ்சிகை மட்டுமல்ல. அவ்வப்போது தேர்ந்தெடுத்து அரிய நூல்களைப் பிரசுரமும் செய்கிறது. விபுலானந்த அடிகளின் ‘யாழ் நூல்’ மூன்றாவது பதிப்பை 2003 இல் வெளியிட்டோம். அதைத் தொடர்ந்து, 2005 இல் எழுத்தாளர் மு.தளையசிஙம் அவர்களுடைய படைப்புக்களைத் தொகுத்து ‘மு.தளையசிங்கம் படைப்புகள்’ என்னும் தொகுப்பையும் வெளியிட்டோம்.

அத்தோடு ‘வீடு’ என்றொரு மாதாந்த பத்திரிகையையும் ‘நலம்’ என்றொரு மாதாந்த சஞ்சிகையையும் வெளியிட்டது. இரண்டுமே இப்போது வெளிவருவதில்லை.

யாழ் நூல்

3ம் பதிப்பு

விபுலநந்த அடிகளாரால் எழுதப்பட்டது.

 

மு.தளையசிங்கம் படைப்புக்கள்

1ம் பதிப்பு

மு.தளையசிங்கம் எழுதிய கதைகள் கட்டுரைகளின் தொகுப்பு

 

நலம்

சஞ்சிகை

உடல் நல ஆரோக்கியம் பற்றிய மாத சஞ்சிகை

இன்னும்…

தமிழில் அரிதாகக் காணப்படும் அல்லது வழக்கற்றுப் போகும் நிலையிலுள்ள நூல்களை நாம் மறுபிரசுரம் செய்ய விரும்புகிறோம். அறியத் தாருங்கள்.

marumoli@gmail.com


மறு பிரசுரம்