உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு | கணனி பொறியியலாளர் கைது!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்தாரிகளை இயக்கி அவர்களுக்கு ஆதரவு வழங்கியதாதக் கருதப்படும் ஒரு மென்பொருள் பொறியியலாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மூன்று வருடங்களாக ஐசிஸ் பயங்கரவாதிகளுடந் தொடர்புகளைப் பேணிவந்த இந்த நபரை இந்திய உளவு நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணித்து வந்திருந்தன என ரோய்ட்டர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சந்தேக நபராகிய 24 வயதுடைய ஆடில் அமீஸ் தாக்குதல்தாரிகளுக்கும் ஐசிஸ் அமைப்பிற்குமிடையில் தொடர்பாளராகப் பணியாற்றி வந்ததாக சிறீலங்கா புலனாய்வுத் துறையும் தெரிவிக்கிறது.ஏப்ரல் மாதம் 25ம் திகதி, சம்பவம் நடந்த நான்கு நாட்களில், ஆடில் அமீஸ் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் ஆனால் இது பற்றிய விபரத்தைக் காவல்துறையினர் வெளியிட விரும்பவில்லை எனவும் அறியப்படுகிறது. இந்திய தேசிய புலனாய்வு ஏஜன்சி மற்றும் குஜராத் மானில காவல்துறை அதிகாரிகள் சிறீலங்கா புலனாய்வுத் துறைக்கு தகவல்களை வழங்கி வருவதாகத் தெரிகிறது.ஆடில் அமீஸ் பிரித்தானிய பல்கலைக் கழகங்களில் கணனி பொறியியல் துறை மற்றும் அரசியல் விஞ்ஞானம் போன்றவற்றில் இளமானி & முதுமானிப் பட்டங்களைப் பெற்றிருப்பதாக அவரது சமூக வலைத்தள சுய விளம்பரங்கள் தெரிவிக்கின்றன.அளுத்கமவில் வசிக்கும் ஆடில் அமீஸ் இன் தந்தை எம்.அமீஸ் தன் மகன் இக் குண்டுவெடிப்புக்களில் சம்பந்தப்பட்டவரல்ல எனவும் அவர் மீது பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன எனவும் கூறுகிறார். ஆனாலும் இது வரை அவரை விடுவிக்க சட்டத்தரணி எவரும் நியமிக்கப்படவில்லை. சமீபத்தில் நடைமுறைப்படுத்தட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரகாரம் ஆடில் அமீசை மிக நீண்ட காலத்துக்கு விளக்க மறியலில் வைத்திருக்கலாம்.ஆடில் பெரும்பாலும் தன் வீட்டிலிருந்து தனியாகவே தொழிற்பட்டு வந்திருக்கலாம் என்றும் குண்டுதாரிகளுக்கான பயிற்சிகளை அவர் வழங்கியிருக்கலாமென்றும் சிறீலங்கா புலனாய்வுத் துறை கூறுகின்றது.

 

 

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)