ஸ்ரெபான் மகேந்திரா – ஆங்கில இசையுலகை அசத்தப் போகும் தமிழர்!

ஸ்ரெபான் ஹரிங்ஸ் மஹேந்திரா (Stefan Harings Mahendra) 23 வயதுள்ள தமிழ் இளைஞர். லண்டனில் உள்ள புறொம்லி சிறு நகரில் வசிப்பவர். ஆங்கிலத்தில் பாட்டுக்களை எழுதிப் பாடவும், கீ போர்ட் வாசிப்பதிலும் வல்லவர் (singer, song writer and keyboard player). சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற ‘வொய்ஸ் யூகே’ (Voice UK) இசைத் திறமைப் போட்டியில் பங்கு பற்றித் தன் திறமையைக் காட்டியபோது பிரபல இசைக் குழுவொன்று (Olly Murs) அவரைத் தனது குழுவில் பாடுவதற்கு சந்தர்ப்பமளித்திருக்கிறது. ஸ்ரெபானின் இசைக்குழுவிற்குப் பெயர் Brown Sugar.

The Voice UK நடாத்திய நான்காவது இசைத் தேர்வில் பிரபல இசைக் கலைஞர்களான Olly Murs, Jennifer Hudson, will.i.am and Sir Tom Jones ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். ஸ்ரெபான் தன் இசைக்குழுவுடன் வந்திருந்ததை அறிந்த அவர்கள் ஸ்ரெபானை மேடையில் பாடும்படி கேட்டுக்கொண்டனர். ஸ்ரெபானின் திறமையை இனம் கண்ட Olly Murs அவரை உடனடியாகத் தனது குழுவில் இணைந்து கொண்டு தான் விரைவில் மேற்கொள்ளவிருக்கும் இசைச் சுற்றுலாவில் பங்குபற்றும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இசையில் மட்டுமல்ல ஸ்ரெபான் மகேந்திரா கிரிக்கெட் விளையாட்டிலும் திறமையுள்ளவர். பந்து வீச்சு, துடுப்பாட்டம் இரண்டிலும் திறமையாக விளையாட வல்லவர்.

மாதங்கி அருட்பிரகாசம் போன்று இவரும் இசையுலகில் கொடிகட்டிப் பறப்பாரென்ற நம்பிக்கை இருக்கிறது.

The Voice UK இசைத் துறையில் திறமையுள்ளவர்களை இனம் கண்டு களமமைத்துக் கொடுக்கும் ஒரு அமைப்பாகும்.

 

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)