ரூபவாஹினி பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது

ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை!

செப்டம்பர் 9, 2019

சிறீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன நேற்றிரவு தனது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பாதுகாப்பு அமமைச்சின் நிர்வாகத்தின் கீழ்க் கொண்டுவந்திருக்கிறார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவே பிரசுரிக்கப்பட்டுவிட்டது. இதற்கு முன்னர் பெரு ஊடக அமைச்சின் கீழ் (Ministry of Mass Media) ரூபவாஹினி செயற்பட்டது.

மைத்திரிபால சிறீசேன ரூவான் விஜேவர்த்தன

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவரினதும் மற்றும் நிர்வாகத்தினதும் நடவடிக்கைகள் தொடர்பாக எழுந்த சிக்கல்கள் காரணமாக ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மங்கள சமரவீர ஊடக அமைச்சராக இருந்த போது இனோக்கா சத்யாங்கினி சிறீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த வருடம் ஜூன் மாதம் உதவி ஊடக அமைச்சர் றுவான் விஜயரத்னா சஞ்ஞீவ விஜேகுணவர்த்தன என்பவரை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குத் தலைவராக நியமித்திருந்தார். இருந்தபோதும் சத்தியாங்கினி தொடர்ந்தும் தன் பணிகளைச் செய்துவந்த படியால் விஜேகுணவர்த்தனவால் கடமைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால் ஊடக அமைச்சர் கெலும் பாலித என்பவரை ரூபவாஹினியின் தலைவராக நியமித்தார். அவரும் தன் கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் ஜனாதிபதி தலையிட்டு ரூபவாஹினியைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளார்.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)