மொன்றியல் நகராட்சி மண்டபத்திலிருந்து சிலுவை நீக்கப்படுகிறது

மொன்றியல் நகராட்சி மண்டபத்தில் கடந்த என்பது வருடங்களாக மண்டபத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த சிலுவை அகற்றப்படுகிறது. மத அடையாளங்களுக்கு அரச அலுவலகங்களில் இடமளிக்கக் கூடாது என கியூபெக் அரசினால் இயற்றப்படட சடடத்திற்கிணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நகராட்சி மண்டபம் புனருத்தாரணம் செய்யப்படும் இவ் வேளையில் அகற்றப்படும் சிலுவை இனி மேல் அங்கு வைக்கப்பட மாடடாது எனவும் மாறாக, அது தொல் பொருட் சாலையில் வைக்கப்படும் எனவும் நகராட்சி சபை அறிவித்திருக்கிறது.

பொதுப்பணியில் ஈடுபடுபவர்கள் மத அடையாளங்களை அணியக்கூடாது என மதச் சார்பற்ற கியூபெக் மாகாண அரசு சென்ற வருடம் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்திருந்தது. பொதுப் பணியில் வேலை பார்க்கும் பல முஸ்லீம் பெண்கள் தலைக்கு கவசம் அணிவதைத் தடுப்பதற்காகவே இச் சட்டம் கொண்டுவரப்பட்டது என அப்போது பரவலாகப் பேசப்பட்டது. ஆனாலும் கியூபெக் மாகாண தேசிய அவையில் சபாநாயகருடைய இருகைக்குப் பின்னாலுள்ள பெரிய சிலுவை ஒன்றை அகற்ற மாட்டோம் என அவ்வரசு மறுத்துள்ள விடயம் அரசின் நடுநிலைத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

மொன்றியல் நகராட்சி மன்றத்தின் சிலுவை அகற்றம் கியூபெக் முதலைச்சர் லெகோ விற்கு இப்போது அழுத்தத்தைக் கொடுத்திருக்கிறது. அதே வேளை , மொன்றியல் நகரின் மவுண்ட் றோயல் மலையின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள 33 மீட்டர் உயரமான சிலுவையை நகராட்சியினர் அகற்றப் போவதில்லை எனவும் அவ்விடத்தில் பொதுப் பணிகள் எதுவும் நிறைவேற்றப் படுவதில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொன்றியல் நகராட்சி மன்றத்தின் இம் முடிவு சிலரை அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது. மன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரான லயனல் பெரஸ் ஒரு தலைக் கவசம் அணியும் யூதர். ” மன்றம் எடுக்கும் இம் முடிவு பல பிளவுகளை உருவாக்கப் போகிறது. மொன்றியல் நகரத்தை உருவாக்கிய மூதாதையற்களின் நினைவாக சிலுவை அங்கிருப்பதுவே முறையானதாகும்” என அவர் கூறுகிறார்.

கியூபெக் மாகாணத்தின் பல நீதி மன்றங்களிலும் சிலுவை துலாம்பரமாகக் காட்சியளிக்கிறது. அவற்றை அகற்றுவதில் மாகாண அரசு எந்த முயற்சியையும் எடுப்பதாகவில்லை. பொதுப்பணியாளர்கள் சமய அடையாளங்களை அணியும் விடயத்தில் பலத்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு சமரசமாக, ஏற்கெனவே பணியிலுள்ளவர்களை இச்சட்டம் பாதிக்காது எனவும் புதிதாகப் பணியில் சேர்பவர்கள் இச்சட்டத்துக்கு அமைய நடக்க வேண்டுமெனவும் அரசு பணிக்கலாம் எனவும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

நன்றி: குளோப் அண்ட் மெயில்

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)