மேஜர் ஜெனரல் ஷவேந்திரா சில்வா சிறிலங்கா இராணுவத்தின் தலைமைப் பணியாளராக நியமனம்

போர்க் குற்றவாளியாக் கருதப்படும் 58 படைப் பிரிவின் முன்னாள் தலைவர் பிரிகேடியர் ஷவேந்திர சில்வா (தற்போது மேஜர் ஜெனரல்) சிறிலங்கா இராணுவத்தின் தலைமைப் பணியாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோத்தாபய ராஜபக்சவுக்கு மிக நெருங்கியவரான சில்வா தற்போது இராணுவத்தின் இரண்டாவது படிநிலையிலுள்ளார்.

இறுதி போரின் போது சில்வா தலைமை தாங்கிய 58 வது  படைப்பிரிவே சரணடைந்த விடுதலைப் புலிகளை சுட்டுக் கொன்றார்கள் என்று  ஐ.நா. நிபுணர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளை , போர்க்குற்றங்களை இழைத்ததாக அமெரிக்காவும் இவர் மேல் வழக்கு ஒன்றைப் பதிவு செய்திருந்தது.

2010ம் ஆண்டு  அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச  இவரை ஐ.நா. வின் துணை நிரந்தர பிரதிநிதியாக நியமித்திருந்தார். இராணுவத்தில் பதவி வகிக்கும் போதே ஐ.நா. பதவி வழங்கப்படட ஒரே ஒருவர் ஷவேந்திர சில்வா ஆகும்.

Please follow and like us:
0

Enjoy this blog? Please spread the word :)