மஹிந்த ஆட்சியில் பிரதேச சபை உறுப்பினருக்கும் காவல்துறை பயப்படவேண்டி இருந்தது – முஜிபுர் ரஹ்மான்

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் பொதுப் பணியாளர்கள் சுயமாகவும், சுதந்திரமாகவும் பணியாற்ற முடியாத நிலை இருந்தது. காவற்துறைப் பொறுப்பதிகாரியே பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அழைப்பாணை விடுவதற்குப் பயப்படவேண்டி இருந்தது என ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும்போது, ” தற்போதய அரசு அதற்கு எதிராகவே நடந்து கொள்கிறது. பிரதேச சபை அங்கத்தவர் காவல்துறையின் கடமையில் தலையிட்டார் என்று அவரைத் தடுப்புக் காவலில் போடும் நிலைதான் இன்று. காவல்துறை சுதந்திரமாகப் பணியாற்றுவதற்கு இந்த அரசு வழிசெய்திருக்கிறது.

” மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் காவல்துறை அதிகாரிகள் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அழைப்பாணை கொடுக்க முடியாது. அப்படியான காலத்தில் நாம் வாழ்ந்தோம். இன்று, ஒருவர் ஐ.தே.க. உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ இருந்தாலும் பாரபட்சமில்லாமல் சட்டம் பிரயோகிக்கப்படும். அது அரசியல் ரீதியாக எங்களுக்கு நன்மைதராமல் இருக்கலாம் ஆனால் நாங்கள் சிவில் சேவையைச் சுயாதீனமாகச் செயற்படவும் காவற்துறையை அரசியல் தலையீடு இல்லாமல் பணியாற்றவும் வழிசெய்திருக்கிறோம்” என ரஹ்மான் கூறினார்.

அவர் மேலும் பேசும்போது, “விமல் வீரவன்ச ஐ.நா. வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தபோது காவல்துறை தன் சட்டத்தைப் பிரயோகிக்கவில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் செய்ய வேண்டியது அரசியல் தலையீட்டை நிறுத்தி பொதுப்பணியைப் பலமாக்க வேண்டியது தான். விமல் வீரவன்ச ஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த போது காவல்துறை அவரை நிறுத்த முயற்சித்தது ஆனால் வீரவன்ச அப்போதய பாதுகாப்புச் செயலாளர் கோதபாயவுக்குப் போன் பண்ணி யதால் அவரது உத்தரவின் பேரில் டி.ஐ.ஜி. யே இடம் மாறவேண்டி வந்தது எனக் கூறினார்.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)