மதமும் விஞ்ஞானமும்

“எதிர் காலத்தில் ஒரு தொழிற்கூடத்தை இயக்;க ஒரு மனிதனும் ஒரு நாயுமே போதும். மனிதனுக்கு வேலை நாய்க்கு உணவு கொடுப்பது. நாய்க்கு வேலை மனிதனை எந்த இயந்திரங்களையும் தொடாமலிருக்கப் பார்த்துக் கொள்வது”

தானியக்க இயந்திரங்களை உருவாக்குவதன் மூலம் தொழிற் புரட்சி வயதுக்கு வந்த காலத்தில் மேற்படி நகைச்சுவைத் துணுக்கொன்று புராதன கணனி மலரொன்றில் வாசிக்க முடிந்தது.

தொழிற் புரட்சி சமுதாயங்களுக்கு அளித்த நன்மைகளைவிட தீமைகளே அதிகம் என்கின்ற பக்கம் என்னுடையது. பேராசை பிடித்த வணிக உலகம்
பண வேட்கையின் பொருட்டு குறுகிய காலத்தில் அதீத பொருளீடு, உற்பத்தி என்கின்ற நோக்கங்களினால் உந்தப்பட்டு இயற்கைச் சமநிலையைக் குழப்பிவருகிறது. சமூக விஞ்ஞானிகளது உலகப் பார்வைக்கும் பொறியியல் விஞ்ஞானிகளது உலகப் பார்வைக்கும் நிறைய வேறுபாடுகளுண்டு. சாதாரண மனிதரது உணர்வுகளின் இயக்கத்தளங்களிலிருந்து அவற்றை செயற்கையான தளங்களுக்கு இடமாற்ற முயல்கிறது சமூக விஞ்ஞானம். பயணத்தின் வீச்செல்லைகளைத் தீர்மானிக்க வேண்டுமானால் ஒரு இயக்கத்தின் மையப்புள்ளி அல்லது மையக்கோடு இயங்காதிருக்க வேண்டும். சமூக கலாச்சார விழுமியங்கள் எப்போதும் சலனமுற்றேயிருக்கும். ஆனால் அச்சலனம் மையப்புள்ளியையே அசைத்துவிடும்போது இயக்கம் கலக நிலைக்குத் தள்ளப்படும். சமூக விஞ்ஞானம் சமூகத்தின் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வுகளை முன்வைப்பதோடு நின்றுவிடும். பொறியியல் விஞ்ஞானம் அப்படியானதல்ல.

பொறியியல் விஞ்ஞானத்தின் மொழியில் கூறினால் சமூக விஞ்ஞானம் ஒரு திறந்த சுற்று (ழிநn டழழி ளலளவநஅ) என்றும் பொறியியல் விஞ்ஞானம் ஒரு மூடிய சுற்று (ஊடழளநன டுழழி ளுலளவநஅ) என்றும் சொல்லலாம். இந்நடைமுறையைப் பின்வருமாறு விளக்கலாம்.

சமூகம் ஒரு தொழிற்கூடம் என்று வைத்துக்கொண்டால் அதன் நடைமுறைப் பெறுபேறுகள் (output) இப்படித்தான் இருக்க வேண்டுமென்று கலாச்சார விழுமியங்களைத் துணக்கழைத்து நிலைநாட்டிக் கொள்ளலாம். அப்படியான பெறுபேறுகளைத் தரவேண்டுமாயின் சமூகம் என்ற தொழிற்கூடத்துக்கு இன்ன இன்ன வசதிகள் (inputs) செய்துகொடுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும். சிறந்த கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆரோக்கியம் என்று பல வசதிகளையும் முன்னீடாகக் கொடுக்கும்போது சமூகம் என்ற தொழிற்கூடம் நல்ல மனிதர்களை உருவாக்கும். இந்தத் தொழிற்பாட்டு நடைமுறையில் விழுமியங்கள் (வசயளெகநச கரஉnஉவழைn) முக்கிய பங்கை வகிக்கும். உருவாக்கப்படும் மனிதர்களின் குணாதிசயங்களில் விரும்பத்தகாத இயல்புகள் காணப்படும்போது முன்னீடாகக் கொடுக்கப்பட்ட வசதிகளில் குறைகளேதுமிருக்கலாம். அல்லது தொழிற்கூடத்தின் முக்கிய எந்திரமான விழுமியங்களின் தாக்கம் குறைவாக இருந்திருக்கலாம். எங்கு எப்படியான குறைகள் ஏற்படுகின்றன என்பதை அறிந்து தொழிற்கூடத்தின் தொழிற்பாட்டை மாற்றுபவர்களே சமூக விஞ்ஞானிகள். துரதிர்ஷ்ட வசமாக சமூகம் இவர்களது பரீட்சைகளுக்குட்பட்டு பலவேறுபட்ட குணாதிசயங்களுடனும் மனிதர்களை உருவாக்கிவிடும். பலவேறு சமூகங்களது விழுமியங்களை அப்படியே வாங்கிவந்து தமது சமூகத் தொழிற்கூடத்தில் ‘பொருத்தி’ கோவேறு கழுதைகளது பிறப்புக்கும் இவர்கள் காரணமாகிவிடுகிறார்கள்.

மாறாக, பொறியியல் விஞ்ஞானிகள் இத் தொழிற்பாட்டை வேறு முறைகளில் அணுகுகிறார்கள். பெறுபேறுகள் விருப்பற்ற முறையில் உருவாகுமட்டும் காத்திராது மக்களது இயல்புகளையும் நடைமுறைகளையும் தொடர்ந்து அவதானித்து, மாற்றங்கள் எவ்வளவு வேகமாக சமூகத்தைப் பாதிக்கும் என்பதைக் கணித்து ஆரம்பத்திலேயே அம்மாற்றங்களின் வேகத்தைக் குறைத்துக் கொள்ளும் விதத்தில் முன்னீடுகளை (inpரவள) தொடர்ந்தும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். தொழிற்பாட்டில் சமநிலை
ஏற்படுமட்டும் இந்நடைமுறை தொடர்ந்து கொண்டேயிருக்கும். இதை மூடிய சுற்று (ஊடழளநன டுழழி ளுலளவநஅ) என்பார்கள்.

இதற்கு நடைமுறை உதாரணமாகப் பின்வரும் நிகழ்வைக் கூறலாம்.

நல்ல புள்ளிகளைத் தவறாது பெற்றுக்கொண்டுவரும் ஒரு பாடசாலை மாணவன் திடீரென்று குறைந்த புள்ளிகளை வாங்கிவிட்டான். காரணம் கேட்டு அவனைத் துன்புறுத்தலாகாது என்று பெற்றோர் விட்டுவிடுகிறார்கள். அடுத்த பரீட்சைக்கு ஒரு வருடமிருக்கிறது. அடுத்த வாரம் அவன் மதியச் சாப்பாடடை அப்படியே திருப்பிக் கொண்டுவந்துவிடுகிறான். அவன் பாடசாலைக்குப் போகிறானா அல்லது எங்காவது கும்மாளமடித்துவிட்டு வருகிறானா என்று அம்மா சந்தேகிக்கிறாள்.

அவனது வாழ்வில் இரண்டு திடீர் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவ்விரு மாற்றங்களையும் வைத்துக்கொண்டு அம்மாணவனது அபிவிருத்திக்கான திசையையும் (மேல் நோக்கிய அல்லது கீழ் நோக்கிய) அதை நோக்கி அவன் போகின்ற வேகத்தையும் தீர்மானிக்கலாம். இவ்விரண்டையும் கொண்டு அவனது பிரச்சினைகளை ஆராய்ந்து திருத்த முயற்சிக்கலாம் அல்லது அவனது அடுத்த வருட பரீட்சைப் பெறுபேறுகள் வருமட்டும் பொறுத்துக் கொள்ளலாம்.

ஆலோசனை கேட்டால், “பேசாமல் விடுங்கோ. பையனுக்கும் சுதந்திரம் கொடுக்கத்தானே வேணும். ஒரு பரீட்சையை மட்டும் வைத்துக்கொண்டு தீர்மானிக்க முடியாது” என்று சமூக விஞ்ஞானிகள் சொல்வார்கள். பொறியியல் விஞ்ஞானிகளோ, “ பையனைக் கொஞ்சம் அவதானியுங்கோ. இந்த வேகத்தில போனால் பையன் பரீட்சையில சித்தியடைவானோ தெரியாது” என்று சொல்வார்கள். சமூக விஞ்ஞானிகளின் அணுகுமுறை உளவியல் ரீதியான மாற்றங்களை அனுசரித்துப் போகும். அதே வேளை பொறியியல் விஞ்ஞானிகளின் அணுகுமுறை யதார்த்தமான நடைமுறை மாற்றங்களை அனுசரித்துப் போகும்.
உலகமயமாக்கல் போன்ற நடைமுறைகளினால் ஒரு சமூகத்தில் திடீரென்று அந்நிய நிறுவனமொன்று தனது நாட்டுக் கலாச்சாரத்தைப் புகுத்த முயலும்போது (கலகக் காரணிகள் னளைவரசடியnஉந எயசயைடிடநள) அதன் பெறுபேறுகள் சமூகத்தில் தோற்றமளிக்கச் சில மாதங்கள் அல்லது வருடங்கள் எடுக்கலாம். மூடிய சுற்று இயக்கத்தில் சமூகம் அவற்றை உடனேயே இனம்கண்டு தேவையான திருத்தங்களை (உழசசநஉவழைளெ) உடனேயே ஆரம்பித்துவிடும். சமூக விஞ்ஞானிகள் போன்று விழுமியங்களை மாற்ற முயலாது கலகக் காரணிகளை இனங்கண்டு புறக்கணிக்கும் கல்வியறிவு போன்ற முன்னீட்டுத் திருத்தங்களை (inpரவ உழசசநஉவழைn) செய்து பெறுபேறுகளைத் திருத்த வழிசெய்யும். யப்பான் போன்ற நாடுகள் இப்படியான தொழிற்பாட்டையே கடைப்பிடிக்க்pன்றன. பொருள்முதல்வாதக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் விழுமியங்களையே மாற்றி விளைவுகளைப் பற்றி அதிகம் கவலைப்படாத நாடுகளாகவே தென்படுகின்றன.

இராணுவக் கட்டுப்பாடுள்ள நமது தாயகப் பிரதேசங்களில் கலாச்சாரப் பின்னடைவு தோன்றியதற்குக் காரணமாக கல்வி, ஆரோக்கியம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற முறையான முன்னீடுகள் தவறிப்போனமையும் சமூகத்தின் தொழிற்பாட்டு மையத்தில் விழுமியத்தை கலகக் காரணிகள் மாசுபட வைத்ததுமேயாகும். இது அநேகமான பல இராணுவ ஆக்கிரமிப்புள்ள சமூகங்களுக்குப் (வியட்நாம்) பொருந்தும்.

விழுமியங்களை மாசுபடுத்தாது சமூகத்தில் தேவையானபோது திருத்தங்களைக் கொண்டுவருகின்ற தன்மை பொறியியல் விஞ்ஞானத்தால் வெற்றிகரமாகக் கையாளப்பட்டதற்கு யப்பான் நாட்டில் மக்களது விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளித்து சுதந்திரமாக இயங்க அவர்களை அனுமதித்த அதேவேளை விழுமியங்களைப் பாதிக்காது திருத்தங்களை அனுமதித்த பாங்கு ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்பட வேண்டும். சமூகத்தின் இயக்கம் ஒரு சமநிலைக்குள் வரும்போது சுமுகமான பிரச்சினைகளற்ற ஒத்திசைவான சமூகமாக அது காக்கப்படும். மக்களிடையே சுதந்திரம் அருகி, கொந்தளிப்பு (உhயழள) உருவாகும்போது கலகக் காரணிகள் இலகுவில் புகுந்து தொழிற்பாட்டையே மாற்றி விட எத்தனிக்கும். உதாரணம் கியூபா, ஈராக் போன்ற நாடுகள்.

சமூக விஞ்ஞானத்தின் உருவாக்கம் நன்நோக்கத்துடனேயே உருவாக்கப்பட்டிருந்தாலும், சமூக மாற்றங்களை உடனுக்குடன் பரீட்சித்து (ளயஅpடந வநளவலiபெ) உடனடியான திருத்தங்களைச் செய்வதற்கேற்ற முறையில் உருவாக்கப்படவில்லை என்பதே எனது வாதம். மாற்றங்கள் தோற்றப்பாடு காணும்போது திருத்தங்களு;க்கான காலம் கடந்துவிட்டிருக்கும் (iநெசவயை). இதனால் சடுதியான மாற்றங்களைக் கொண்டு வந்து மக்களது வெறுப்புகளைச் சம்பாதிக்கும் செயலாகவே அமையும். இலங்கையின் இனப்பிரச்சினையையும் இதே கண்ணோட்டத்தில் பார்க்கலாம். இலங்கை சுதந்திரமடைந்தபோதிருந்ததைவிட இப்போது நிலைமை மோசமாயிருக்கிறது என்பதை எந்த மடையனும் ஒப்புக்கொள்ளும்போது இம்மாற்றங்களை உரிய காலத்தில் இனம் கண்டு முன்னீடுகளை மாற்றிக் கொள்ளாதது அரசியல்வாதிகளின் தவறு. சிங்கள தமிழ்ச சமூகங்கள் எத்தனை கலகங்களைக் கண்டிருந்தாலும் திருத்தங்கள் என்று எதுவுமே நடைபெற்றதில்லை. 50 வருடங்களின் அரசியல் தவறுகள் இன்று சமூகங்களை எங்கோ கொண்டுபோய் விட்டிருக்கின்றன.

நவம்பர் 11, 2004 – தமிழர் தகவல் 2005 ஆண்டு மலரில் பிரசுரமானது

Please follow and like us:
0

Enjoy this blog? Please spread the word :)