மக்கள் தயாரானால் நான் ஜனாதிபதி தேர்தலுக்குத் தயார் – கோதபாய ராஜபக்ச

ஜனவரி 13, 2019

“மக்கள் தயாரானால் ஜனாதிபதி தேர்தலில் நிற்க நான் தயார்” என வியாத்மகவில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் பேசும்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்தார்.

” எல்லோரும் தனிப்பட்டவர்களின் உரிமைகள் பற்றியே பேசுகிறார்கள் ஆனால் ஒரு பலமான தேசத்தைக் கட்டியெழுப்பும்போது சமூகத்தின் தேவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என, தான் சார்ந்து நிற்கும் கொள்கைகள், நிலைப்பாடுகள் குறித்து அவர் மேலும் கூறினார்.

தொடர்ந்து பேசும்போது, “தமது நாடுகளை அபிவிருத்தி செய்த ஆசியாவின் பல தலைவர்கள் தேசியவாதத்தையே தமது மூலவேராகக் கொண்டிருந்தார்கள். தாராளவாத ஜனநாயகம் உலகெங்கும் முட்டுக்கட்டைகளை எதிர்கொள்கிறது அதனால் மக்கள் இப்பொழுது தேசியவாதத்தையே அரவணைக்கிறார்கள். நாட்டில் வசிப்பவர்களை விட வெளினாடுகளில் வதியும் இலங்கையர்களே தேசியவாதத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டுள்ளார்கள். உலகத்தைப் பார்த்து அதன் அரங்குகளில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை அறிந்து புரிந்து வைத்திருப்பவர்கள் அவர்கள். தேசியவாதத்தின் விழுமியங்களை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்” என்றார் அவர்.

Photo Credit: Colombo Telegraph

Please follow and like us:
0

Enjoy this blog? Please spread the word :)