புற்றுநோய் பரவுதலைக் கட்டுப்படுத்த புதிய மருந்து!

புற்றுநோய் பரவுதலைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்தொன்றைத் தயாரிக்கும் முயற்சியில் இலங்கை வம்சாவளியினரான, ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஹசினி ஜயயதிலகாவும் அவரது குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.

புற்றுநோய் சம்பந்தமான ஆராய்ச்சிகள் பொதுவாக அதன் திரட்சிகளை அழிப்பதிலோ அல்லது மேலும் வளராது கட்டுப்படுத்துவதிலோதான் நடைபெற்றுவருகின்றன. ஆனால் டாக்டர் ஹசினியும் குழுவினரும் செய்துவரும் ஆராய்ச்சியில் புற்றுநோய் நுரையீரல், ஈரல், எலும்பு மச்சை போன்ற இதர உறுப்புகளுக்கு பரம்பலடைவதேலேயே  (metastisis) மரணம் ஏற்படுகிறது என்றும் நோயின் பரவலுக்கு அதி முக்கிய காரணம் புற்றுநோய்க் கலங்கள் தம்மிடையே சமிக்ஞைகளைப் பரிமாறிக் கொள்வதனால் தான் சாத்தியமாகிறதென்றும் ஒரு கருதுகோளை முன்வைத்து ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள். கலங்கள் தம்மிடையே மேற்கொள்ளும் சமிக்ஞைகளைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது தடுப்பதினாலோ அவை பரவுவதையும் தடுக்கலாம் என டாக்டர் ஹசினியின் ஆரம்ப ஆராய்ச்சிகள் நம்பிக்கை தருவதாகத் தெரிவிக்கிறார்.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)