புதிய கண்களூடு சிறீலங்காவைப் பாருங்கள் – சிறிசேன

புதிய கண்களூடு சிறீலங்காவைப் பாருங்கள்

– மைத்திரிபால சிறீசேன உலகுக்கு அழைப்பு!

சமீபத்தில் ஐ.நா. மனித உரிமை செயற்குழுவின் 73 வது அமர்வின்போது பேசிய சிறீலங்காவின் ஜனாதிபதி சர்வதேச சமூகத்துக்கு மேற்கண்ட அழைப்பை விடுத்தார்.

“இனங்களுக்கிடையேயான இணக்கம், ஜனனாயக சுதந்திரத்தின் மீளுருவாக்கம், மனித உரிமைகள் மற்றும் சட்ட ஒழுங்கு நிலைநாட்டப்பட்டமை போன்ற விடயங்களில் நாட்டில் முன்னேறம் ஏற்பட்டுள்ளது. சமாதானத்தை நிலைநாட்டவும் பொருளாதாரத்தை முன்னேற்றவும் நாம் எடுக்கும் முயற்சிகளைச் சர்வதேச சமூகம் புரிந்துகொண்டு ஆதரவை வழங்க வேண்டும். எமது மக்களே எமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள சர்வதேசம் அனுமதிக்க வேண்டும்” என ஜனாதிபதி தனது உரையின் போது கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றும்போது, “ஒரு சுதந்திரமான எமது நாட்டின் மீது எந்தவொரு வெளி நாடும் அழுத்தம் தருவதை நாம் விரும்ப மாட்டோம். எங்கள் பிரச்சினஇகளை நாமே தீர்த்துக் கொள்வதற்கான வெளியைச் சர்வதேச சமூகம் எமக்குத் தரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

அதே வேளை இனங்களிடையே இருக்கும் பயத்தையும், சந்தேகங்களையும் ஒழிப்பதற்கான முயற்சிகள்ஐ அரசாங்கம் எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

Please follow and like us:
0

Enjoy this blog? Please spread the word :)