பிரி.பிறியங்கா பெர்ணாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை!

பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் தீர்ப்பு

சிறீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரியான பிரிகேடியர் பிரியங்கா பெர்ணாண்டோ கடந்த வருடம் பெப்ரவரி 4ம் திகதி தமிழ் ஆர்ப்பாட்டக்காரருக்கு ‘கழுத்தை விட்டி விடுவேன்’ என்று சைகை காட்டியது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இவ் வழக்கின் மீதான தீர்ப்பின் போதே வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்ற நீதிபதி பொது ஒழுங்கு சட்டத்தின்கீழ் அதிகாரியின்  நடத்தை  தவறெனத் தீர்ப்பளித்து கைதுக்கான பிடியாணையை வழங்கினார்.

இத் தீர்ப்பைத் தொடர்ந்து சர்வதேச பிடியாணை வழங்கப்படுமெனவும் இவ்விடயத்தில் சிறீலங்கா அரசு ஒத்துழைக்க மறுப்பின் லண்டனிலுள்ள சிறிலங்காவிற்கான தூதுவர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பணிக்கப்படலாம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)