பிரிகேடியர் பிரியங்காவுக்கு விடப்பட்ட பிடியாணை ரத்து!

வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடியாணையை மீளப்பெற்றது

ஜனவர் 26, 2019

பிரித்தானியாவில் சிறீலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு இணைப்பதிகாரியாகக் கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்கா பெர்ணாண்டோ மீது விடுக்கப்பட்ட பிடியாணையை வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மீளப்பெற்றது. தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்த தமிழர்களுக்கு ‘கழுத்தை வெட்டுவேன்’ என்று சைகை காட்டியதன் காரணமாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு பிடியாணை வழங்கப்பட்டிருந்தது. இப்பிடியாணையை நீதிமன்றம் மீளப்பெறுவதில் அரசியல் தலையீடு இருக்கலாம் என நம்பப்படுகிறது. பிரிகேடியருக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற அழைப்பு வினியோகத்தில் ஏற்பட்ட குழறுபடி காரணமெனவும் இதில் ஐக்கிய ராச்சிய வெளிநாடு, பொதுநலவாய நாடு காரியாலயத்துக்கு (UK Foreign and Commonwealth Office – FCO) வழங்கப்பட்ட பிழையான தகவல்களை அடிப்படையாகக் கொண்டே நீதி மன்றம் தீர்ப்பை வழங்கியது எனவும் அக்காரியாலயம் தவறைச் சுட்டிக்காட்டி பிடியாணையை மீளப்பெற்றது எனவும் கூறப்படுகிறது.

 

 

 

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)