பிரபல இந்திய வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மறைந்தார்

ராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதற்காக சிறைக்கைதிகள் சார்பில் வழக்காடியதால் தமிழருக்குப் பரிச்சயமான ராம் ஜெத்மலானி தனது 95 வது வயதில் காலமானார்.

சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் இன்று காலமானார்.

இவர் இந்தியாவிலேயே பிரபலமான வழக்கறிஞராக இருந்து பின்னர் பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் பாராளுமன்றம் சென்று யூனியன் மந்திரியாகவும் இருந்தவர். அவருக்கு இரண்டு மனைவிமாரும் நான்கு பிள்ளைகளும் உண்டு.

ராஜிவ் கொலைவழக்கில் வெற்றிபெற்றபின் வை.கோவுடன்

இந்தியா/ பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னர் சிந்து மாகாணத்தில் பிறந்து பிரிவினையின்போது அகதியாக இந்தியா வந்தவர். 17 வயதிலேயே தனது முதலாவது வழக்கில் ஆஜராகியவர்.

குற்றவியலில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுப் பல பிரபல வழக்குகளில் தோற்றியிருந்தாலும் சிவில் வழக்குகளிலும் அவர் சளைத்தவர் அல்ல.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வை.கோபால்சாமியுடன் இணந்து வழக்காடி சில கைதிகளின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியவர்.

இந்தியாவிலேயே அதிகமாகப் பணம் பெற்று வழக்காடும் வழக்கறிஞர் இவர். இறாக்கும்போது ஒய்வு மெற்றிருந்தார்.

பாரதீய ஜனதாக் கட்சியின் பல அரசியல்வாதிகள் இவரது மரணத்துக்கு அஞ்சலி செலுத்தினர், அவரது இறுதிக்கிரியைகள் லோதி றோட் தகன சாலையில் இன்று நடைபெறும்.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)