நாளொன்றுக்கு நான்கு பாதாம் பருப்பு | அதிசய மருத்துவ நிவாரணி

நாளொன்றுக்கு நான்கே நான்கு பாதாம் பருப்புகளைச் சாப்பிட்டு வாருங்கள். பல வியாதிகளிலிருந்து அது உங்களைக் காப்பாற்றும்.

கொலெஸ்ரெறோல் விடயத்தில் பாதாம் பருப்பு இரண்டு விதமான நன்மைகளைச் செய்கிறது. ஒன்று: அது LDL எனப்படும் ‘கெட்ட’ கொலெஸ்ரெறோலைக் குறைக்கிறது. இரண்டாவது: HDL எனப்படும் ‘நல்ல’ கொலெஸ்ரெறோலைக் கூட்டுகிறது. உடலில் அதிக அளவில் இருக்கும் ‘கெட்ட’ கொலெஸ்ரெறோல் பலவிதமான வியாதிகளுக்கும் காரணமாகிறது, குறிப்பாக மாரடைப்பு (heart attack), பாரிச வாதம் (stroke) மற்றும் நாடி வியாதி (peripheral artery disease) ஆகியன.

எமது உடல் தானாகவே கொலெஸ்ரெறோலை உருவாக்குகிறது. உயிர்க் கலங்களை உருவாக்கவும், உணவைச் சமிபாடடையச் செய்யவும், ஹோர்மோன்கள் மற்றும் வைட்டமின் D களை உற்பத்தி செய்யவும் கொலெஸ்ரெறோல் அத்தியாவசியமானது.

ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணும் போது ‘கெட்ட’ கொலெஸ்ரெறோல் (LDL) உடலில் அதிகரிக்கிறது. இது இருதய வியாதியை மட்டுமல்ல, நீரழிவு, ஈரல், சிறுநீரகம் மற்றும் தைறோயிட் இயக்கக் குறைவு போன்ற வியாதிகளுக்கும் காரணமாகிறது.

‘கெட்ட’ கொலெஸ்ரெறோலைக் குறைப்பதற்கு பலர் மருந்துகளைப் பாவித்தாலும் சரியான உணவு வகைகளை உண்பதும், ஒழுங்காக அப்பியாசம் செய்வதும் உடற் பருமனைக் குறைப்பதும் அத்தியாவசியமானவை.

அவ்வகையில் பாதாம் பருப்பு, அவகாடோ போன்ற உணவுகள் மிகச் சிறந்தவை. தினமும் நான்கு பாதாம் பருப்புகளி உண்ணும் போது உடலிலுள்ள ‘கெட்ட’ கொலெஸ்ரெறோலின் அளவு 10 வீதத்தால் குறைகிறது என ஒரு ஆய்வு கூறுகிறது.

இருதய நாடிகளின் உட் சுவர்களில் படியும் கொலெஸ்ரெறோல் கழிமம் இரத்த ஓட்டத்தைக் குறைப்பதனாலோ அல்லது முற்றாகத் தடைசெய்வதனாலோ தான் மாரடைப்பு ஏற்படுகிறது. எமது உணவு வகைகளில் அதிகம் ‘கெட்ட’ கொலெஸ்ரெறோலைக் கொண்டவை என்பது பல தடவைகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

 

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)