தொழில் நுட்பம்

Yarl IT-Hub

Yarl IT Hub ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம். கடந்த எட்டு வருடங்களாக இயங்கி வருகிறது.  Yarl Geek Challenge என்ற நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்களே இந்த முய்றசியை மேற்கொண்டு வருபவர்கள். சிறீலங்காவின் பிந்தங்கிய பிரதேசங்களை மேம்படுத்தும் பலவித முன்னெடுப்புக்களை Yarl IT Hub எடுத்து வருகிறது. இம் முனைப்புகளைத் தாம் எடுத்து வரும் நோக்கங்கள், அர்ப்பணிப்புகள் பற்றி அதன் நிறுவனர்களின் ஒருவராகிய பாலதாசன் சயந்தன் கீழே விளக்குகிறார்.

உங்கள் வாழ்க்கைத் துணை யார்? – முகனூல் அறியும்!

உங்கள் படங்களைப் பகுத்தாய்வதன் மூலம் நீங்கள் யாருடன் வாழ்க்கை நடத்துகிறீர்கள் என்பதை முகனூல் தெரிந்து கொள்ளும். இத் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமை ஒன்றை முகனூல் நிறுவனம் பதிவு செய்திருக்கிறது. இதன் மூலம்  விளம்பரங்களை முகனூல் பாவனையாளரை இலக்கு வைத்து விளம்பரங்களைச் செய்ய அது உத்தேசித்துள்ளது.

கூகிளின் புதிய வழி காட்டி  Visual Positioning System (VPS)  

பாதை மாறித் தொலைந்துபோன அனுபவமுண்டா? கவலையை விடுங்கள். உங்கள் நண்பன் / நண்பி கூகிள் உங்கள் நித்திய துணைக்கு வரத் தயார்.உங்கள் தொலைபேசிக்   காமிராவே இனி உங்கள் வழிகாட்டி  எனச் சொல்கிறார் அபர்ணா சென்னபிறகாடா. சமீபத்தில் கூகிள் I /O  நிகழ்வில் அவர் இதைச் செயன்முறை மூலம் விலக்கிக் காட்டினார்.கூகிள் உருவாக்கிய மென்பொருள் உங்கள் கைப்பேசியுடன் இணைந்து இயங்கி அதை உங்கள் வழிகாட்டியாக மாற்றி விடுகிறது. கூகிள் இதற்கு காணொளி நிலைக்  குறிப்பு அமைப்பு (?) Visual Positioning System  (VPS) எனப் பெயரிட்டிருக்கிறது. இது கூகிளின், ஏற்கெனவே பாவனையிலுள்ள ‘கூகிள் வரைபட’ நிலை காட்டி மென்பொருளுடன் சேர்ந்து இயங்கும்.