தேவாலய தாக்குதல்கள்| த.தே.கூ. ஊடக அறிக்கை

நாம் ஒன்றிணைந்து பலமாக நிற்போம்

இன்று கொழும்பிலும் மட்டக்களப்பிலும் உள்ள தேவாலயங்கள் மற்றும்  ஹோட்டல்களை குறிவைத்து நடாத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல்களையிட்டு நான் மிகவும் கவலையடைந்துள்ளேன்.

இச்சம்பவங்களுக்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிமேதகு         ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கோரிக்கை விடுகின்றேன். இக் கோழைத்தனமான, துக்ககரமான தாக்குதல்களில் தம் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் இணைந்து நிற்குமாறு இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுகின்றேன். இத்தகைய கடும்போக்காளர்கள் இந்நாட்டினைபின்னிட்டு கொண்டு செல்லக்கூடாத படி, நாம் ஒன்றிணைந்து  பலமாக நிற்போம்.

இரா சம்பந்தன்

பா.உ. – திருகோணமலை மாவட்டம்

தலைவர் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)