தி.மு.க. கூட்டணி 29 ஆசனங்களைப் பெறும் – கருத்துக் கணிப்பு

அ.தி.மு.க – பா.ஜ.க. கூட்டணி 9 ஆசனங்களைப் பெறலலாம். 

நடைபெற்று முடிந்த இந்திய மக்களவைத் தேர்தல்களின் முடிவுகள் மே மாதம் 23 ம் திகதி அறிவிக்கப்பட இருக்கிறது. ஆனாலும் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற்ற கையோடு வாக்களித்த மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் பிரகாரம் தமிழ் நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 29 ஆசனங்களையும் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி 9 ஆசனங்களையும் பெறலாம் எனத் தெரிய வருகிறது. இக கருத்துக் கணிப்பை டைம்ஸ் நவ் – வி.எம்.ஆர். இணைந்து நடத்தியிருந்தன.

 

2014 தேர்தல்களில் தி.மு.க கூட்டணி ஒரு ஆசனத்தைக் கூடப் பெற்றிருக்காத போது அ.தி.மு.க. – பா.ஜ.க கூட்டணி 37 ஆசனங்களைப் பெற்றிருந்தது. ஜயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்து ஒரு பகுதி பா.ஜ.க. வுடனும் மற்றது பா.ம.க மற்றும் தே.மு.தி.க கட்சிகளோடு இணைந்து போட்டியிட்டன.

நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம், அ.ம.மு.க ஆகிய கட்சிகள் கருத்துக்கணிப்பில் சேர்க்கப்பட்டிருந்தனவா என்பது பற்றிய தகவல்கள் எதையும் இந் நிறுவனங்கள் கூறவில்லை. தமிழ் நாட்டின் பல ஊடகங்கள் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் ஈடுபாடு குறித்து எதையும் கூறுவதில்லை என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.

 

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)