ஆனந்தி கோபால்|அமெரிக்காவில் மருத்துவம் படித்த முதல் இந்தியப் பெண்

ஆனாந்தி கோபால் 9 வயதாகவிருக்கும் போது அவருக்கு 20 வயது மூத்தவரான கோபால ராவை மணமுடிக்கிறார். தொடர்ந்து அவரது வாழ்க்கை ஒரு வகையில் அவரது கணவரால் தான் வழிநடத்தப்படுகிறது. கோபால்ராவ் பெண்கள் கல்வி கற்கவேண்டுமென்பதில் மிகவும் அக்கறை கொண்டவர். ஆனந்தி தொடர்ந்தும் கல்வி கற்க வேண்டும், ஆங்கிலம் கற்க வேண்டுமென்பது ராவின் நிபந்தனை. கல்வியைத் திறம்படக் கற்க வேண்டுமென்பதற்காக ஆனந்தியைப் பலவழிகளிலும் துன்புறுத்தினார். நாற்காலிகளையும், புத்தகங்களையும் அவர் மீது வீசுவதுமுண்டு என்று ஆனந்தி அமெரிக்காவிலிருந்து அவருக்கு எழுதிய கடிதங்களில் காணப்படுகிறது.

ஆனாலும் ஒரு மருத்துவராக ஆகவேண்டுமென்பது ஆனந்தியினுடையது. அவரது ஆண் குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்ட போதே அவர் அந்த முடிவுக்கு வந்தார். நாட்டில் பெண் மருத்துவர்களுக்கு இருந்த பற்றாக்குறையே அவருக்கு உந்துசக்தியாக இருந்தது. ஒரு கர்ப்பிணித்தாயானவள் எப்படி ஒரு ஆண் மருத்துவரது பரிசோதனைக்குட்படமுடியும் என்ற கேள்வி அவரைத் தொடர்ந்தும் நச்சரித்து வந்தது. துர்ப்பாக்கியமாக கனவு நிறைவேறுவதற்கு முன்னதாகவே, அவர் தனது சொந்தமான மருத்துவ நிலையத்தை ஆரம்பிக்க முன்னதாகவே ஆனந்தி இறந்து போகிறார். 1887 இல், தனது 21 வயதில் அவர் இந்தியா திரும்பிச் சிறிது காலத்தில் அவர் காச நோய் பீடித்து மரணமாகிறார்.

“ஆனாலும் அவரது அவாவும், சிறிது காலத்துக்காவது அவர் அடைந்த வெற்றியும் பின்னாளில் பல தலைமுறைகளாகப் பெண் மருத்துவர்களை உருவாக்கி விட்டது” என்கிறது சிமித்சோனியன் இணையத் தளம். அவரது சாதனையைத் தொடர்ந்து பல இந்தியப் பெண்கள் அவரது காலடிகளைத் தொடர்ந்தார்கள்.

ஆனந்தி தன் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகப் பட்ட துன்பங்களைஇப் படத்தின் மூலம் தொட்டுக்காட்ட வேண்டுமென்பதே வித்வான்ஸ் இனது விருப்பம். ஒரு பக்கத்தில் அவருடைய விருப்பங்களுக்கு எதிராகக் கண்டனங்களை எழுப்பும் இந்து அயலவர்கள். மறுபக்கத்தில் அவரை வெளிநாட்டுக்கு அனுப்புவத்ற்காக அவரை மதம் மாற்றுவதற்கு முயற்ச்சிக்கும் கிறிஸ்தவ மிஷனறிகள். இறுதியாக, ஆனந்தியும் கணவரும் அமெரிக்காவுக்கு வருவதற்கு எடுக்கின்ற முயற்சிகள் பற்றி பிறின்ஸ்டன் மிஷனறி ரிவியூ பத்திரிகை மூலம் அறிந்த நியூ ஜேர்சியைச் சேர்ந்த தியோடிசியா கார்ப்பென்ரரின் உதவியுடன் சாத்தியமாகும் அவரது கனவு.

“நான் ஏன் இந்தக் கதையை இப்போ வெளிக் கொணர வேண்டும்” வித்வான்ஸ் கூறுகிறார். “பெண்கள் இப்போதும் பாகுபாட்டுக்குட்படுத்தப் படுகிறார்கள். சபரிமலை அல்லது ஷானி சிங்கபூர் கோவில்கள் இப்போதுதான் பெண்களை உள்ளே அனுமதித்திருக்கின்றன. பெண்கள் கல்வி கற்க முடியாதென்றிருந்த காலத்தில், 140 வருடங்களுக்கு முன்னதாகவே தன் மனைவி கல்வி கற்கவேண்டுமென்று அடம் பிடித்தவரின் கதை. அதை இப்போது நான் சொல்ல வேண்டும்”
இப் படத்திற்கான திரைக்கதை கரன் சித்தன்ற் சர்மா என்பவரால் இந்தியில் எழுதப்பட்டு மராத்தி மொழிக்குத் தழுவல் செய்யப்பட்டது. சமீப காலங்களில் இந்தியாவில் வெளிவரும் சுய சரிதை வகையான படங்களோடு சேர்கிறது ஆனந்தி கோபால்.

 

 

 

 

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)