முல்லைத்தீவில் 1000 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் – ஜனாதிபதி

ஜனவரி 21, 2019

வடமாகாண அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை முல்லைத்தீவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டார். ஆனால் இவ் விஜயத்தின்போது வடமாகாண அபிவிருத்தி அமைச்சராக இருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைக்கப்படவில்லை.

இருப்பினும், பல ஆளும் கட்சி, எதிர்க்கட்சி அமைச்சர்களை இவ் விஜயத்தில் ஜனாதிபதி தன்னோடு அழைத்துச் சென்றிருக்கிறார். ஐ.தே .கட்சியைச் சேர்ந்த தயா கமகே, ரிஷாட் பதியுதீன், எதிர்க்கட்சியைச் சேர்ந்த தயாசிறி ஜயசேகர, அங்கஜன் ராமநாதன் மற்றும் காதர் மஸ்தான் ஆகியவர்களுடன் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனும் ஜனாதிபதியுடன் இவ்விஜயத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். தமிழர் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது பற்றிய தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

இவ் விஜயத்தின் போது வட மாகாணத்தின் போதைப் பொருள் பாவனைத் தடுப்பு முன்னெடுப்பு, வெள்ளத்தால் பாதிப்புற்ற முல்லைத்தீவுப் பகுதிப் பாடசாலைகளுக்கான நிதி உதவி மற்றும் அரச ஆக்கிரமிப்பிலிருக்கும் 1000 ஏக்கர் நிலத்தை மக்களின் பாவிப்புக்காக விடுவித்தல் போன்ற விடயங்களை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)