சென்னையில் கடும் வரட்சி | நீருக்காக மக்கள் நெடுந்தூரம் அலைகிறார்கள்!

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வரட்சி சென்னையை வாட்டி எடுக்கிறது. சில இடங்களில் வெப்பநிலை 41 பாகை செல்சியஸ் வரைக்கும் (106 பாகை பரன்ஹைட்) சென்றுள்ளது. இன்னும் ஒரு கிழமைக்கு இன்நிலை தொடரும் எனவும் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் எனவும் சென்னை வாநிலை மையம் எச்சரித்திருக்கிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய இடங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன.

Photo Credit: indiafolk.com

சென்னை கடந்த் மூன்று வருடங்களாக வரட்சியைச் சந்தித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகப் பருவ மழை தவறியதன் காரணமாகவும் இருக்கும் நீர் நிலைகள் முறையாகப் பராமரிக்கப் படாமையினாலும் பெய்கின்ற மழைகூட நிலத்தில் தங்காது கடலில் கலந்து விடுவதனாலும் இவ் வரட்சி இந்தத் தடவை மிகவும் கடுமையாக இருப்பதாக சூழலியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

கடந்த வியாழன் வரையில் சென்னையின் நான்கு ஏரிகளில் 31 மில்லியன் கன அடி நீரே மிச்சமாக இருக்கிறது. மொத்தத்தில் இது 11,257 மில்லியன் கன அடியாக இருந்திருக்க வேண்டும். நிலைமையைச் சமாளிப்பதற்கு சென்னை நகராட்சி நீர் வழங்கல் சபை மாற்று வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறது. பல நிறுவனங்கள் தமது பணியாளர்களை வீடுகளிலிருந்தே பணியாற்றும்படி பணித்திருக்கின்றன. பல கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளன. தேவையற்ற நீர்க்கழிவைத் தடுத்து பாவனை நீரின் அளவைக் கட்டுப்படுத்த கருவிகள் செயற்படுத்தப்படுகின்றன.

அதிகரித்து வரும் நீர்ப்பிரச்சினை காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டுள்ளது. நாளாந்த நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய மாநில அரசு எவ்வகையான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என விளக்கம் தருமாறு அரசைப் பணித்திருக்கிறது.

நீர் நிலைகள் அனைத்தும் வரண்டுபோன நிலையில் மக்கள் நீருக்காக பல கிலோமீட்டர்கள் தூரத்துக்குச் செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

 

 

 

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)