சூர்யாவின் NGK (நந்த கோபாலன் குமரன்) | மே 31 முதல் உலகத் திரைகளில்!

சூர்யா நடித்த செல்வராகவனின் என்.ஜி.கே. (நந்த கோபாலன் குமரன்) படம் மே 31 உலகெங்கும் திரைகளுக்கு வந்தது. இரண்டு வருட கால உருவாக்கத்தின் பின்னர் வெளிவந்த அரசியல் சாகச வகையான இத் திரைப்படத்தில் சூர்யா, ராகுல் பிரீத், சாய் பல்லவி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

வெளிவந்து முதலாம் நாளே இப் படம் பற்றிய விமர்சனங்கள் திருப்தியாக இருக்கவில்லை எனினும் இரண்டாம் நாள் இத் திரைப்படம் பற்றிய செய்திகள் பரவத் தொடங்கியதும் பார்வையாளர்கள் படையெடுக்கத் தொடங்கி விட்டனர். சூர்யா எடுத்திருக்கும் பாத்திரமான ‘நந்த கோபாலன் குமரன்’ பற்றிய ரசிகர்களின் கருத்தாடல்கள் திரையரங்குகளை நிரப்புவதற்கு உதவிவருவதாகப் பேசப்படுகிறது.

இரண்டாவது நாளில் சென்னையில் மட்டும் 1.07 கோடி வருமானத்தை இப் படம் ஈட்டியிருக்கிறது. முதலாவது நாளில் வருமானம் 1.04 கோடியை எட்டியிருந்தது. அமெரிக்காவில் இது வரையில் $117,000 டாலர்களைக் குவித்திருக்கிறது.

மக்களுக்குச் சேவை செய்ய விரும்பும் ஒரு மரியாதைக்குரிய அரசியல்வாதியாக உருவாகுவதற்காக எந்த யுக்தியையும் கையாளத் துடிக்கும் ஒரு விவசாயியைப் பற்றிய கதையை வைத்து நகர்கிறது இப் படம்.

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)