கேப்பாபிலவு, தோப்பூர் சம்பந்தமாக த.தே.கூ. பிரதமர், ஜனாதிபதிக்குக் கடிதம்

10.03.2019
இரா. சம்பந்தன் பா.உ.,
176, சுங்க வீதி,
திருகோணமலை.
பீ12,  மகாகம்சேக்கர மாவத்த,           கொழும்பு – 07
கௌரவ ரணில் விக்கிரமசிங்க பா.உ.,
பிரதம மந்திரி,
பிரதம மந்திரி அலுவலகம்,
கொழும்பு
கௌரவ வஜிர  அபேவர்தன பா.உ.,
உள்நாட்டலுவல்கள் அமைச்சர்,
உள்நாட்டலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
அன்புள்ள கௌரவ பிரதம மந்திரி & அமைச்சர் அவர்களே,
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர்  பிரதேச செயலாளர் பிரிவில்  தோப்பூர்  பிரதேச செயலாளர் பிரிவு  என அழைக்கப்படும்  ஒரு புதிய  பிரிவை ஏற்படுத்துவதன் மூலம்  தற்போதைய மூதூர் பிரதேச செயலாளர் பிரிவை  பிரிப்பதற்கான முன்மொழிவு
1. திருகோணமலை மாவட்டத்தில்  மூதூர் பிரதேச செயலாளர் பிரிவு என  அறியப்படும்  ஒரு பிரதேச செயலாளர் பிரிவு  தற்போது  உள்ளது.
2. மூதூர்  பிரதேச செயலாளர் பிரிவு  தமிழர் பெரும்பான்மையினராகவிருந்த ஒரு தமிழ்  பிரிவாகிய முன்னைய (ஆரம்ப கால)  கொட்டியாபுரபற்று  பிரிவின்  ஓர் உப பிரிவாகும்.
3. கொட்டியாபுர பிரிவு  மூன்று உப பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது:
I.     மூதூர் பிரதேச செயலாளர் பிரிவு
II.   சேருவில பிரதேச செயலாளர் பிரிவு
III. வெருகல் பிரதேச செயலாளர் பிரிவு
4. மூதூர் பிரதேச செயலாளர் பிரிவும்  ஆரம்பத்தில்  தமிழர் பெரும்பான்மையாகவிருந்த  ஒரு  பிரதேசமேயாகும். யுத்தம் காரணமாக  பெரும் எண்ணிக்கையிலான  தமிழர் இடம்பெயர்ந்து தற்போது திருகோணமலை மாவட்டத்தின்  அல்லது நாட்டின் ஏனைய பாகங்களிலும் வெளிநாடுகளிலும்  வசிப்பதையடுத்து,  மூதூர் பிரதேசம்  தற்போது முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச செயலகப் பிரிவாக  உள்ளது. அது 70,188 பேரைக்
கொண்டிருக்கிறது. அவர்களுள் 42,599 பேர் முஸ்லிம்கள், 26,608 பேர்  தமிழர.  981     பேர் சிங்களவர்.
5. தற்போதைய முன்மொழிவு  முஸ்லிம்களை பெரும்பான்மையினராகவும் ஒரு சில  தமிழர்களையும் கொண்ட  தோப்பூர் பிரதேச செயலகப் பிரிவு  என்றழைக்கப்படும்  இன்னமொரு முஸ்லிம் பெரும்பான்மை  பிரிவை ஏற்படுத்துவதற்கானதாகும்.  இதன் விளைவாக ஏற்படும் நிலையானது,  இரண்டு முஸ்லிம் பெரும்பான்மை  பிரிவுகள் இருக்கும் என்பதாகும்:
I.   மூதூர்  பிரதேச செயலாளர் பிரிவு
II. தோப்பூர் பிரதேச செயலாளர் பிரிவு
இவ்விரு பிரிவுகளிலும் தமிழ் மக்கள்  சிறுபான்மையினராகவே இருப்பர்.  இது அவர்களது எதிர்காலத்திற்குப்  பாதகமானதாகும்.
6. அத்தகைய  முன்மொழிவிற்கு  அனுமதி கோரி  அடுத்த  அமைச்சரவைக் கூட்டத்தில் அல்லது  விரைவில்  அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படவிருப்பதாக  எனக்கு அறியக் கிடைக்கிறது.
7. நான் இம்மாவட்டத்தைச் சேரந்த ஒரு சிரேஷ்ட  பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், இவ்விடயம் தொடர்பாக என்னுடன் கலந்துரையாடப்படவில்லை. ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களோடும் கலந்துரையாடப்பட்டதாகத் தோன்றவில்லை.
8. தமிழ் மக்கள்  பெருமளவில் இடம்பெயர்ந்திருந்தும்  மூதூர் பிரதேச செயலகப் பிரிவின் மொத்த மக்கள் தொகையில் அவர்கள்  இன்னும்  40 வீதத்தினராக உள்ளனர் என்பதை நீங்கள்  காண்பீர்கள்.  தமிழ் மக்களை 1. மூதூர் பிரதேச செயலகப் பிரிவு. 2. தோப்பூர் பிரதேச செயலகப் பிரிவு என இரண்டு  பிரதேச செயலகப் பிரிவுகளில் பிரித்து இரு பிரிவுகளிலும் அவர்கள் சிறுபான்மையினராக இருக்கும் வண்ணம் செய்வது  அநீதியானதாகும்.
9. அநீதி இழைக்கப்படாதிருப்பதை உறுதிப்படுத்த அனைத்து மக்களது பிரதிநிதிகளோடும்  உரிய கலந்துரையாடல்கள்; செய்து  தீர்மானங்கள்  மேற்கொள்ளப்படவேண்டும்.  தற்போதைய  முன்மொழிவு  தமிழ் மக்களுக்கு  பெரும் அநீதி விளைவிக்கும்.
எனவே,  தற்போதைய முன்மொழிவு  முன்கொண்டுசெல்லப்படலாகாது என்றும் அனைவருக்கும்  நீதி வழங்கப்படுவதை  உறுதிப்படுத்தும் வகையில்  பல்வேறு மக்களது பிரதிநிதிகளோடும் உரிய கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டுமென்றும்  நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.
தோப்பூர் பிரதேச செயலகப் பிரிவு என்று பெயரிடப்பட்ட   இன்னமொரு முஸ்லிம் பெரும்பான்மை  பிரதேச செயலகப் பிரிவை  ஏற்படுத்துவதற்கான  தற்போதைய  முன்மொழிவு  இறுதித் தீர்மானங்கள் எட்டப்படும்வரை நிறுத்தப்படவேண்டுமென நான் வினயமாக கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
தங்களுண்மையுள்ள
ஒப்பம்
இரா. சம்பந்தன்
பாராளுமன்ற உறுப்பினர்
திருகோணமலை  மாவட்டம்
பிரதிகள்:  பிரதம அமைச்சரின் செயலாளர்
உள்நாட்டலுவல்கள் அமைச்சின்  செயலாளர்
கிழக்கு மாகாண ஆளுநர்
அரசாங்க அதிபர் & மாவட்டச் செயலாளர், திருகோணமலை
_________________________________________________________________________________
10.03.2019
இரா. சும்பந்தன் பா.உ.
176, சுங்க வீதி,
திருகோணமலை,
பீ12, மகாகம்சேக்கர மாவத்த,
கொழும்பு – 07

மேதகு மைத்திரிபால சிறிசேன,
சனாதிபதி – இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு,
சனாதிபதி செயலகம்,
கொழும்பு – 01
முல்லைத் தீவு  மாவட்டத்தின்  கேப்பாப்பிலவில் புலம்பெயர்ந்த தமிழ் குடிமக்களுக்குச் சொந்தமான காணிகள்
மேதகு சனாதிபதி அவர்களே,
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில்  உள்ள தனியார் காணிகளை  விடுவிக்கும் விடயம் தொடர்பாக  நான் உங்களுக்குக் கடிதம் எழுதியிருப்பதோடு, அது தொடர்பாக  தங்களோடு கலந்துரையாடியுமுள்ளேன்.
இவ்விடயம் தொடர்பாக  பாதுகாப்பு அமைச்சுடனும்  ஆயுதப் படை அதிகாரிகளுடனும்  நான் தொடர்புகொண்டு  எடுத்தியம்பியுள்ளேன்.
இக்காணிகள் விடுவிக்கப்படுமென  நீங்கள் உறுதிமொழி வழங்கினீர்கள். இது, ஆயுதப்படையினர் வசமுள்ள, புலம்பெயர்ந்த தமிழ்  குடிமக்களுக்குச் சொந்தமான  தனியார் காணிகள் அனைத்தும்  2018  டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படும்  என்ற தங்களுடைய கொள்கைத் தீர்மானத்திற்கு அமைவானதாகும்,
கேப்பாப்பிலவிலுள்ள 70 ஏக்கர் பரப்புக் கொண்ட காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.  இக்காணிகள்  இப்புலம்பெயர்ந்த  தமிழ்  மக்களுக்கும்  அவர்தம் குடும்பத்தினருக்கும்   பரம்பரை பரம்பரையாக  பல நூற்றாண்டு காலம்  சொந்தமாகவிருந்ததோடு, அவர்கள் அதில் தங்கிவாழ்ந்து  தமது  சமூக, கலாசார மற்றும்  சமய நோக்கங்களுக்காக  அவற்றைப்  பயன்படுத்தியும் வந்தனர். இக்கணிகள்மீது அவர்களுக்குப்  பெரும் பற்றுதல் உண்டு.
தமது இக்காணிகள் தமக்கு ஒப்படைக்கப்படவேண்டுமெனக் கோரி  அவர்கள்  2017 மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் (இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக)  இக்காணிகள் முன்னே தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆயுதப் படையினர் ஒத்துழைத்து  கேப்பாப்பிலவிலுள்ள  கணிசமானளவு காணிகளை  விடுவித்துள்ளனர். எனினும், ஏறத்தாழ 70 ஏக்கர் காணி இன்னும் விடுவிக்கப்படாதுள்ளது.
பாதுகாப்பு நோக்கங்களுக்காக தேவைப்படின்,  பாதுகாப்புப் படையினர்  பயன்படுத்தக்கூடிய போதுமான அரச காணிகள்  இக்காணிகளுக்கு அருகாமையில்  உள்ளன. அவர்கள்
அவ்வரச காணிகளுக்குச்  சென்றால்,  இத்தனியார் காணிகளைச் சுவீகரிப்பதற்காக  இழப்பீடு செலுத்தவேண்டிய தேவை எதுவும்  இராது.
இப்புலம்பெயர் தமிழ் மக்கள்  இக்காணிகள்மீது  மட்டற்ற பற்றுகொண்டுள்ளனர். எனவே தமது அக்காணிகளைத் திரும்பப் பெறுவதில்  அவர்கள் உறுதிபூண்டுள்ளனர். குறிப்பாக இக்காணிகளை விடுவிப்பது  நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கிய ஒரு  பெரும் முன்னெடுப்பாக அமையும்.
தனியார்  காணிகளை  விடுவிப்பதை  சாதகமான முறையில் பரிசீலிக்க  தாங்கள்  விரும்புகிறீர்கள் என்பதை நான் அறிவேன். இக்காணிகள் விடுவிக்கப்படவேண்டுமென தாங்கள் தீர்மானமொன்று மேற்கொள்ளவேண்டுமென  நான் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
தங்களுண்மையுள்ள,
ஒப்பம்
இரா. சம்பந்தன்
பாராளுமன்ற உறுப்பினர்
திருகோணமலை மாவட்டம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)