கூகிளின் புதிய வழி காட்டி Visual Positioning System (VPS)

பாதை மாறித் தொலைந்துபோன அனுபவமுண்டா? கவலையை விடுங்கள். உங்கள் நண்பன் / நண்பி கூகிள் உங்கள் நித்திய துணைக்கு வரத் தயார்.

உங்கள் தொலைபேசிக்  காமிராவே இனி உங்கள் வழிகாட்டி  எனச் சொல்கிறார் அபர்ணா சென்னபிறகாடா. சமீபத்தில் கூகிள் I /O  நிகழ்வில் அவர் இதைச் செயன்முறை மூலம் விலக்கிக் காட்டினார்.

கூகிள் உருவாக்கிய மென்பொருள் உங்கள் கைப்பேசியுடன் இணைந்து இயங்கி அதை உங்கள் வழிகாட்டியாக மாற்றி விடுகிறது. கூகிள் இதற்கு காணொளி நிலைக்  குறிப்பு அமைப்பு (?) Visual Positioning System  (VPS) எனப் பெயரிட்டிருக்கிறது. இது கூகிளின், ஏற்கெனவே பாவனையிலுள்ள ‘கூகிள் வரைபட’ நிலை காட்டி மென்பொருளுடன் சேர்ந்து இயங்கும்.

இதுவரை காலமும் கூகிள் நிலை காட்டி போகும் பாதைகளைத் தரவிறக்கி வழிகளைக் காட்டும் செயலைச் செய்து வந்தது. சில வேளைகளில்  இத்  தரவுகளில் ஏதாவது பிசகு ஏற்படின் ‘நாம் தொலைந்து போவதற்க்கான வாய்ப்பு இருந்தது.  இப் புதிய காணொளி நிலைக்கு குறிப்பின் மூலம் நீங்கள் இருக்கும் சூழலைப் படம் எடுத்து அனுப்பியவுடன் கூகிள் உங்கள் பாதையை நீங்கள் இருக்கும் சூழலுடன் பொருத்தி வேண்டிய பாதையை உங்கள்  கண் முன்னே  செவ்வனே காட்டி அருளும்.

கைப்பேசியின் முகப்பிலுள்ள ‘ activate visual view; என்ற ‘ பட்டனை ‘ அழுத்தியபின் கைப்பேசியை நீங்கள் போகும் திசையில் பிடித்தால் போதும்.  அது நீங்கள் போக வேண்டிய இடத்துக்கு இலகுவாக வழி காட்டும். உங்கள் இலக்கைக்  களிப்புடன் சென்றடைய கைப்பேசியின் முகப்பில் நரியார் ஒருவர் துணைக்கும் வரலாம்.

விரைவில் எதிர் பாருங்கள் என்பதோடு நாம் நிறுத்திக் கொள்கிறோம். அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Please follow and like us:
0

Enjoy this blog? Please spread the word :)