கனிமொழி-ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையில் சந்திப்பு!

செப்டம்பர் 13, 2019

தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அவரது உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையில் சந்தித்து தமிழ்நாட்டு மீனவர் இலங்கைக் கடற்பிரதேசத்துள் அத்துமீறிச் சென்று மீன் பிடிக்கும் விவகாரம் உட்படப் பல விடயங்கள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அமைச்சர் ராவுப் ஹக்கிம், மீன்பிடி, கடல் வள அபிவிருத்தித் துணை அமைச்சர் டிலிப் வேடாராச்சி ஆகியோரும் இச் சந்திப்பின்போது சமூகமளித்திருந்தனர்.

சந்திப்பின் போது, தமிழ்நாட்டு மீனவர் தாக்கப்படுவது தொடர்பாகக் கனிமொழி கேள்வியெழுப்பியதாகத் தெரிகிறது.

அமைச்சர் ராவுப் ஹக்கிம் இன் இரண்டாவது மகளின் கொழும்பில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொள்வதற்காகக் கனிமொழி வியாழனன்று இலங்க வந்திருந்தார்.

இந்திய மீனவர் இலங்கைக் கடற் பிரதேசத்துக்குள் அத்துமீறிப் பிரவேசிப்பது குறித்து இரு நாடுகளுக்கிடடையே பல தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருப்பினும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

Photo Credit: The Island

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)