CANADA கனடா

Canadian News கனடிய செய்திகள்

கனடிய அரசியல் | பிரதமர் பிழைத்துக்கொள்வாரா?

யாராவது சோதிட வல்லுனர்கள் இருந்தால் சொல்லுங்கள் , பிரதமர் ட்ரூடோ தற்போதய சூறாவளியிலிருந்து தப்பிப் பிழைப்பாரா? பத்தாமிடத்தில் விழானா? பதி கை மாறுமா? பாவம் நமது செல்பி

சீனப் புதுவருடக் கொண்டாட்டம் – மார்க்கம்

சீன புது வருடக் கொண்டாட்டம் – மார்க்கம் சீனப் புது வருடக் கொண்டாட்டம் இன்று மார்க்கம் நகரசபை மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.  மார்க்கம் சீன வர்த்தக சம்மேளனத்தால் ஒழுங்கு

தமிழர்களின் நண்பர் போல் டூவர் 1963 – 2019

  கனடிய புதிய ஜனநாயகக் கட்சியின் ஒட்டாவா – மத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர்களின் நண்பருமான போல் டூவர் இன்று (பெப்ரவரி 6, 2019) காலமானார்.

US files charges against China’s Huawei and CFO Meng Wanzhou -BBC

The US Justice Department has filed a host of criminal charges against Chinese telecoms giant Huawei and its chief financial

கனடிய வரலாறு

Map of Canada

Map of Canada
Canadian History: A Summary கனடிய வரலாறு - சுருக்கம்
  • கி.மு. 30,000 – 10,000: வரலாற்றுக்கு முந்தய வேடுவர் ஆசியாவிலிருந்து வந்தார்கள்
  • கி.பி. 1000 ஆண்டளவில் லீப் எறிக்சன் தலைமையில் வைக்கிங் குழு வருகை
  • கி.பி. 1451: ஈரோக்குவா கூட்டரசு ஆரம்பிக்கப்பட்டது
  • கி.பி. 1497: ஜோன் கபோட் நியூபவுண்லாந்து / கேப் பிறிட்டனை அடைதல்
  • கி.பி. 1534: ஜாக்ஸ் காட்டியே செயிண்ட் லோறென்ஸ் பகுதியை ஆராய்தல்
  • கி.பி. 1608: கியூபெக் நகரில் சாமுவேல் டி சேம்ப்ளைன் முதலாவது பிரன்சுக் காலனியை உருவாக்குதல்
  • கி.பி. 1670: ஹட்சன்ஸ் பே நிறுவனம் உருவாக்கப்படுதல்
  • கி.பி. 1755: அக்கேடியர்களை வெளியேற்றுதல்
  • கி.பி. 1759: ஏப்ரகாம் சமவெளிப் போரும் கியூபெக் நகர் கைப்பற்றப் படுதலும்
  • கி.பி. 1763: நியூ பிரான்ஸ் பிரிட்டனுக்குக் கொடுக்கப்படல்; பொண்டியாக் கலகம் ஆரம்பம்
  • கி.பி. 1783: அமெரிக்கப் புரட்சியைத் தொடர்ந்து பிரித்தானிய ஆதரவாளர் வருகை
  • கி.பி. 1812 – 14: 1812 போர் – அமெரிக்கா கனடா மீது படையெடுப்பு
  • கி.பி. 1837 – 38: பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக கனடாவின் மேல் மற்றும் கீழ் பிரதேசங்களில் கலகம்
  • கி.பி. 1848: முதலில் நோவ ஸ்கோஷியாவிலும் பின்னர் கனடா முழுவதிலும் பொறுப்பான அரசு உருவாக்கம்
  • கி.பி. 1867: கியூபெக், ஒன்ராறியோ, நோவ ஸ்கோஷியா, நியூ பிறண்ஸ்விக் மாகாணங்கள் இணைந்த கூட்டாட்சி உதயம்
  • கி.பி. 1870: றெட் றிவர் எதிர்ப்பு; மனிற்றோபா மாகாணம் உருவாகுதல்
  • கி.பி. 1871 -1873: பிரிட்டிஷ் கொலம்பியா ப்ரின்ஸ் எட்வாட் ஐலாண்ட் கனடாவுடன் இணைதல்
  • கி.பி. 1885: வட மேற்கு கலகம்; கனடியன் பசிபிக் ரயில்வே நிறைவேற்றம்
  • கி.பி. 1905: அல்பேர்ட்டா, சஸ்கச்சேவன் மாகாணங்கள் உருவாக்கம்
  • கி.பி. 1914 – 18: முதலாம் உலக யுத்தம்
  • கி.பி. 1916: மனிற்றோபா, சஸ்காச்சேவன், அல்பேர்ட்டா மாகாணங்களில் பெண்கள் வாக்களிக்கும் உரிமை பெறல்
  • கி.பி. 1919: வினிபெக் பொது வேலை நிறுத்தம்
  • கி.பி. 1929 – 39: பெரும் பஞ்சம் (Great Depression)
  • கி.பி. 1939 – 45: இரண்டாம் உலக யுத்தம்
  • கி.பி. 1949: நியூபவுண்லாந்து கனடாவுடன் இணைதல்
  • கி.பி. 1950 -53: கொரிய யுத்தம்
  • கி.பி. 1959: செயிண்ட் லோறென்ஸ் நீர்ப்பாதை திறப்பு ( பாரிய போக்குவரத்துப் பாதை)
  • கி.பி. 1960: கியூபெக் அமைதிப் புரட்சி ஆரம்பம்; சுதேச கனடியர்களுக்கு வாக்குரிமை வழங்கல்
  • கி.பி. 1967: கனடாவின் 100 வது பிறந்த நாள்; Expo 67 உலக சந்தை மொன்றியாலில் நிகழ்வு
  • கி.பி. 1970: ஒக்டோபர் நெருக்கடி: அரசியல் கடத்தல்கள்; ஒட்டாவா மத்திய அரசு சிவில் உரிமைகளை ரத்துச் செய்தல்
  • கி.பி. 1980: கியூபெக் தனி நாட்டுக்கான சர்வசன வாக்கெடுப்பு 60% / 40% விதத்தில் தோற்கடிக்கப்படுதல்
  • கி.பி. 1982: உரிமைகள் மற்றும் சுதந்திரம் பட்டயம் அடங்கிய அரசியல் சாசனம் உருவாக்கப்படல்
  • கி.பி. 1987–90: மீச் லேக் ஒப்பந்தம் முன்வைக்கப்பட்டு முறியடிக்கப்படல்
  • கி.பி. 1992: சாலட்டவுண் ஒப்பந்தம் சர்வஜன வாக்கெடுப்பால் முறியடிக்கப்படல்
  • கி.பி. 1995: கியூபெக் சர்வசன வாக்கெடுப்பு மயிரிழையில் தோற்கடிப்பு
  • கி.பி. 1999: புதிய ஆர்க்டிக் ரெறிரோறி நுனாவுட் (Nunavut) உருவாக்கம்
  • கி.பி. 2000: கியூபெக் மாகாணப் பிரிவினை பற்றிய தெளிவான சட்ட வரைவு (Clarity Bill) உருவாக்கம்
  • கி.பி. 2003: ஈராக் யுத்தத்தில் கலந்து கொள்ள கனடா மறுப்பு தெரிவித்தல்
  • கி.பி. 2005: முன்னாள் பிரதமர் ஜான் கிரெத்தியேனும் நடப்பு பிரதமர் போல் மாட்டினும் கொமெறி விசாரணையில் சாட்சியமளித்தல்
  • கி.பி. 2010: வான்கூவர் வின்ரர் ஒலிம்பிக்கில் கனடா தங்கப் பதக்கங்கள் பெற்றுச் சாதனை.