ஒரே வரம் | கல்கியின் ஒரு தலையங்கம்

1946 இல் கல்கி ஒரு தலையங்கம் எழுதியிருந்தார். அதன் ஒரு பகுதி இது..

ஒரு காலத்தில் தத்துவம், சிற்பம், நுண் கணிதம், விஞ்ஞானம் ஆகிய எல்லாத் துறைகளிலும் ஒரு மகத்தான , உலகம் முழுவதுக்கும் வழிகாட்டியாக விளங்கிய அளவுக்கு மகத்தான நாகரீகத்தைப் பெற்ற கிரேக்க சமுதாயம் ரோமானியர்களின் ஆதிக்கச் சிறையில் அகப்பட்டுத் தத்தளிக்கத் தொடங்கியது. அப்போது கிரேக்கர்கள் ஒரே ஒரு வரம் கேட்டுப் பிரார்த்தனை செய்தார்கள்.  “இறைவா எங்கள் சொத்து அழியட்டும், அரசியல் சுதந்திரம் அழியட்டும். கவலை இல்லை. என்றொ ஒரு நாள் நாங்கள் அவற்றைத் திரும்பப் பெறுவோம். அது நிச்சயம். எங்கள் சகோதர குடிமக்கள் அழியட்டும். கவலை இல்லை. இம் மண்ணில் எம் வம்சம் திரும்பத் தோன்றும். ஆனால் இந்தக் காட்டுமிராண்டிக் கொடுங்கோலர்களான ரோமானியரின் கைகளில் எங்கள் நாகரீகத்தை, கலாச்சாரத்தை அழியச் செய்துவிடாதே. ஒரு முறை அவை அழிந்து போனால் அதை நாங்கள் என்றுமே திரும்பப் பெற முடியாது. இந்த ஒற்றை வரத்தை மட்டும் எங்களுக்கு அளி”

நமது நிலையும் அதுவே. நாமும் இறைவனிடம் வேண்டிக் கொள்வது இந்த ஒரே வரம் தான். இந்த தமிழ் நாட்டின் கலாச்சாரமும் நாகரீகமும் அழியாது காப்பாற்று. வேறு எதையும் நீ நாசம் செய்துகொள்!

கல்கி

உரிவியது: ‘இச் சூழலில்’ – வெங்கட் சாமிநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *