ஐ.நா. அறிக்கையை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம் | அமைச்சர் மரப்பாண

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் திலக் மரப்பாண கூறியுள்ளார். எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவ்வாறு அவர் கூறினார்.

வடக்கில் ஆக்கிரமித்திருக்கும் நிலங்களை இராணுவம் உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்கவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது தவறு எனவும் 90% த்துக்கு மேலான நிலங்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டன என்பதை நாம் மனித உரிமைகள் ஆணையகத்துக்கு அறிவிப்போம் எனவும் அமைச்சர் கூறினார்.

“ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கையையும் சிறீலங்காவினால் இணைந்து முன்மொழியப்பட்டதனால் பெறப்பட்ட தீர்வையும் ஒன்றெனக் கருதிக் குழப்பமடையக் கூடாது. போருக்குப் பின்னரான நல்லிணக்கம், மீள் குடியேற்றம் மற்றும் மீதமான வேலைகள முடித்துக் கொடுப்பதற்கான கால அவகாசத்தைக் கோருதல் என்ற விடயங்களை மட்டுமே ஆணையகத்தின் தீர்வு சுட்டி நிற்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்திற்கு இணைந்த தீர்மானமொன்றை நாம் முன்மொழிவதன் மூலம் சிறீலங்கா சர்வதேச அரங்கில் தனக்குரிய நற்பெயரைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. தனது விவகாரங்களைத் தானே கையாள வல்லது என்பதனைச் சர்வதேச சமூகத்துக்கு சிறீலங்கா உணர்த்தியுள்ளது” என அமைச்சர் மேலும் கூறினார்.

 

 

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)