ஐ.தே.கட்சி அரசு மாகாணசபைகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் – ரணில்

செப்டம்பர் 8, 2019

அடுத்த பாராளுமன்றத் தேர்தலில், மாகாணசபைகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதற்கான ஆணையைப் பெறும் கோரிக்கையை ஐ.தே.கட்சி தலைமையிலான கூட்டணி மக்களிடம் முன்வைக்கும் என சனிக்கிழமை, யாழ்ப்பாணத்தில் ‘என்ரெபிறைஸ் சிறீலங்கா’ கண்காட்சியைத் திறந்துவைத்துப் பேசும்போது பிரதமர் விக்கிரமசிங்க தெர்வித்தார்.

‘என்ரெபிறைஸ் சிறீலங்கா’ கண்காட்சி – யாழ்ப்பாணம்

“மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சபை முன்வைத்த பிரேரணையை சகல கட்சிகளும் அங்கீகரித்திருந்தன. இருப்பினும் சபையில் பெரும்பான்மை இல்லாமையால் அப் பிரேரணையை எங்களால் நடைமுறைப்படுத்த முடியாமற் போய்விட்டது. அடுத்த பாராளுமன்றத்தில் அதை நாம் நடைமுறைப்படுத்துவோம்.

வடக்கில் இன்னுமொரு யுத்தம் எமக்கு வேண்டாம். போரின்போது சுமார் 100,000 உயிர்களை நாம் இழந்துவிட்டோம். இலங்கையர்கள் என்ற அடையாளத்தை உருவாக்குவதற்காக நாம் உழைத்தோம். உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்களை நிகழ்த்திய பயங்கரவாதிகளைத் தோற்கடிக்கும் அதேவேளை நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்த வேண்டும்.” என்றவர் மேலும் தெரிவித்தார்.

“தொழில் முயற்சியாளர் – சிறீலங்கா’ என்ற திட்டத்தின் கீழ், 53,000 தொழில் முயற்சியாளர்களுக்கு 90 மில்லியன் ரூபாய்களைப் பகிர்ந்தளித்தோம். இதன் மூலம் யாழ்ப்பாணத்திலும் இதர பகுதிகளிலுமுள்ளவர்களின் தொழில் வல்லமையை ஸ்திரப்படுத்தவே முனைகிறோம்.

பொருளாரம் பணப்புழக்கக்கத்தில் திழைக்கிறது. பல தொழில் வல்லுனர்கள் வெற்றிகரமான தொழில்களை நடத்துகிறார்கள். எமது வரலாற்றில் தொழில் முயற்சிகள் எப்போதுமே இருந்ததுண்டு. அது எங்களது பாரம்பரியம். யாழ்ப்பாணத்தை அண்டி மூன்று துறைமுகங்கள் இருந்தன. திருகோணமலை, தம்பகோல பட்டினம், மாந்தோட்டம் போன்றனவே அவை. நாங்கள் யானைகளையும், புகையிலையையும் ஏற்றுமதி செய்தோம், முத்துக் குளிப்பு செய்தோம். இருப்பினும் 1983 க்குப் பிறகு சுமார் 600,000 பேர் வெளிநாடுகளுக்குப் போய்விட்டனர். 2015க்குப் பிறகு நாங்கள் யாழ்ப்பாணத்தைப் புத்தெழுச்சி பெறச் செய்தோம். அதன் பலனாக இப் பகுதியிலுள்ள ஒப்பந்தக்காரர்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். பலாலி விமான நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது. இது பலருக்கும் வேலைவாய்ப்புக்களை வழங்கும். பலாலி விமானநிலையத்திலிருந்து இந்தியாவுக்கு விமான சேவைகள் ஆர்ம்பிக்கப்படவிருக்கிறது. இச் சேவைகள் காலக்கிரமத்தில் இதர விமான நிலையங்களுக்கும் விஸ்தரிக்கப்படும். இதனால் சுற்றுலாத் துறை முன்னேற்றமடையும்” எனப் பிரதமர் தெரிவித்தார்.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)