‘என்ரெபிறைஸ் சிறீலங்கா’| 2000 பேர் கடனுக்கு விண்ணப்பித்தனர்

போர் விதவைகளுக்கும், முன்நாட் போராளிகளுக்கும் பயிற்சிப் பட்டறை

யாழ் முற்றவெளியில் நடைபெற்ற கண்காட்சியைப் பார்வையிட வந்தவர்களில் 2000 பேர், தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்காக அரச வங்கிகளால் வழங்கப்பட்ட குறைந்த வட்டியிலாலான கடன்களுக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.

கண்காட்சியில் சுமார் 3 இலட்சம் மக்கள் பங்குபற்றியதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான நியூஸ்.லங்கா செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ். என்ரெபிறைஸ் சிறீலங்கா கண்காட்சியில் கலந்துகொண்ட மக்கள்

ஐந்து வலயங்களாகப் பிரிக்கப்பட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இக் கண்காட்சியில் தொழில் முயற்சிக்கென அமைக்கப்பட்டிருந்த வலயத்தில் இலங்கையின் பிரதான வங்கிகள் தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கென குறைந்த வட்டியில் கடனுதவிகளைப் பெறுபவர்களுக்கு விண்ணப்பங்களைப் பெற்றது மட்டுமால்லாது அந்த இடத்திலேயே வைத்து வங்கி அதிகாரிகள் விண்ணப்பங்களைப் பரிசீலித்து கடன்களையும் வழங்கினர். கண்காட்சிக்கு வந்தோரில் பெரும்பாலோர் இந்த வலயத்திலேயே நிரம்பி வழைந்தனர் என்றும் குறைந்தது 2000 பேர் வரையில் கடன்களுக்கு விண்ணப்பிருந்தனர் என்றும் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

‘றான் அஸ்வென்னா’, ‘கோவி நவோடா’ எனப் பெயரிடப்பட்ட இக் கடன்கள் விவசாயத்தை வணிகமயமாக்கவும், இயந்திரமயமாக்கவும் பயன்படும் எனவும் விண்ணப்பதாரிகளின் சொந்த இடங்களிலுள்ள அரச வங்கிகளினால் இக் கடன்கள் வழங்கப்படும் எனவும் அறியப்படுகிறது.

அத்தோடு, போர் விதவைகள் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாட் போராளிகள் ஆகியோர் ‘என்ரெபிறைஸ் சிறீலங்கா’ கடன்களைப் பெறுவதற்கு வசதியாக, ஆகஸ்ட் 13, வெள்ளியன்று யாழ் மாவட்டச் செயலகத்தில் அவர்களுக்கென இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை ஒன்றையும் நிதியமைச்சு ஒழுங்கு செய்துள்ளது.

நிதியமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட குறைந்த வட்டிக் கடன் மூலம் இலங்கை முழுவதும் வருடமொன்றுக்கு 1 லட்சம் தொழில் வல்லுனர்களை உருவாக்குவதற்கு அவ்வமைச்சு திட்டமிட்டிருக்கிறது என்று நியூஸ்.லங்கா தெரிவிக்கிறது.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)