இறந்த திமிங்கிலத்தின் வயிற்றில் 6 கிலோ பிளாஸ்டிக் கழிவு!

இந்தோனேசியாவின் வகடோபி தேசியப் பூங்காவில் சில தினங்களுக்கு முன் 31 அடி நீளமுள்ள இறந்த திமிங்கிலமொன்றின் உடல் கரையொதுங்கியது.

அதன் இறப்பின் காரணத்தைக் கண்டறிய முடியாதெனினும், அதன் வயிற்றில் காணப்பட்ட சுமார் 6 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் உயிரிழப்புக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாமென உலக விலங்கின சம்மேளனத்தின் இந்தோனேசியப் பொறுப்பாளர் கருத்து தெரிவித்தார். 115 குடினீர் கிண்ணங்கள், 4 பிளாஸ்டிக் போத்தல்கள், 25 பிளாஸ்டிக் பைகள், 2 காலணிகள் ஆகியன அதன் வயிற்றில் காணப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் தீவுகள், வியட்னாம், தாய்லாந்து ஆகிய ஐந்து ஆசிய நாடுகளிலிருந்தும் வரும் சமுத்திரக் கழிவுகள் உலகின் 60 % த்தை எட்டுகின்றது என சூழலியல் செயற்பாட்டு நிறுவனங்கள் கூறுகின்றன.