இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இந்தி எதிர்ப்பு

இந்தி மொழித் திணிப்பு விவகாரம் தமிழ் நாட்டில் பெரும் தலைகளையே ஆட்ட வைத்திருக்கிறது. ஒஸ்கார் விருது பெற்ற இசை இயக்குனர் ஏ.ஆர். ரஹ்மான் கடந்த சில நாட்களாகத் தனது குருவி (ட்வீட்) மூலம் சில ‘கீச்சல்களை’ அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு பஞ்சாபிக்காரர் பாடும் ‘மாரியான்’ தமிழ்ப் பாட்டை முன்வைத்து ‘பஞ்சாப்பில் தமிழ் பரவுகிறது’ என்றொரு கீச்சலை அனுப்பியிருந்தார். இது ‘இந்தியத்துக்கு ஏதிரானது’ எனப் பலரும் விமர்சித்திருந்தார்கள். நேற்று, மீண்டும் ‘ஹிந்தியைத் திணிக்கும் திட்டம் நகலிலிருந்து நீக்கப்பட்டு விட்டது, அது தான் நல்ல முடிவு’ எனவும் கீச்சல் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

இன்று அவர் ‘Autonomous’ என்ற ஆங்கிலச் சொல்லைத் தன் கீச்சலில் கேம்பிரிட்ஜ் டிக்சனரி இணையத் தளத்தில் தரப்பட்ட ‘இச் சொல்லலின் கருத்து ‘சுதந்திரமானதும் தனது முடிவுகளைத் தானே எடுக்க வல்லதும்’ என்பதனையும் இணைத்து பூடகமாகத் தன் கருத்தை / எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் வலைப் பாவனையினர் இது குறித்து தமது மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகிறார்கள்.

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)