ஆசியாவில் விரிவடைந்துவரும் ஐ.எஸ். நடவடிக்கைகள் |ACLED

ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட ஐ.எஸ் (IS) பயங்கரவாதிகள் இப்போது இந்தியா, சிறீலங்கா, துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் கால்பதித்திருப்பதாக இன்றய ‘இந்துஸ்தான் ரைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.

உலகின் பலவிடங்களிலும் நடைபெறும் ஆயுதப் போராட்டங்களை அவதானித்து தரவுகளைச் சேகரித்துவரும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட அமைப்பான ‘அக்லெட்’ (Armed Conflict Location and Event Data (ACLED)) டின் தரவுப்படி இந்த வருடம் ஐ.எஸ். மீளிணைந்து மேற்காசியாவில் மேற்கொண்டதைவிட அதிக தாக்குதல்களை அதற்கு வெளியே செய்திருக்கிறது எனத் தெரிகிறது.

‘அக்லெட்’ டினால் வெளியிடப்பட்ட ‘Branching Out: Islamic State’s Continued Expansion’ எனத் தலைப்பிடப்பட்ட அறிக்கையின்படி, “2018இல் ஈராக்கிலும் சிரியாவிலும் இழந்த தளங்களைவிட ஐ.எஸ். உலகம் தழுவிய ரீதியில் விரிவாக்கம் செய்து வருகின்றது” என அறியப்படுகிறது.

“இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களுக்குள், விரிவாக்கப்பட்ட உலக நடவடிக்கைகளில் ஐ.எஸ். எதிர்பாராத அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. சிறீலங்காவின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின் ஜிகாதித் தலைவர் அபூபக்கர் அல்-பக்டாடி வெளியிட்டிருக்கும் காணொளியின்படி, வடக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் இவ்வியக்கம் குறிவைத்துச் செயற்படுகிறது” என ‘அக்லெட்’ அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)