அருகிவரும் தாடிகளும் மசூதிகளும் | சீனாவில் இஸ்லாம்

சீனாவில் சுதந்திரமான மத வழிபாடுகளுக்கு விதிக்கப்படும் தடை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இஸ்லாமின் தொழுகை விடயத்தில் அரசின் கெடுபிடிகள் அதிகரித்து வருகின்றன.

சமீபத்தில் பி.பி.சி. ஊடகத்தின் நிருபர் ஜோன் சட்வேர்த் சீனாவின் மேற்குப் பிரதேசமான சின்ஜியான்ங் கிற்குச் சென்று சில தகவல்களைத் திரட்டி வெளியிட்டுள்ளார். சின் ஜியாங் ஒரு அதிகாரப் பகிர்வைக் கொண்ட பிரதேசம். அரச பாதுகாப்பு கெடுபிடிகள் அவரது சுதந்திர நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திய போதிலும் அவர் அவதானித்த விடயங்கள் அதிர்ச்சி தருவனவாக உள்ளன.

பல இடங்களில் மிக நீண்டகாலமாக இருந்த இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டுத் தரைமட்டமாக்கப் பட்டுள்ளன. தெருக்களில் இஸ்லாமிய கலாச்சாரத்தின் சின்னங்கள் அகற்றப்பட்டுள்ளன. இஸ்லாமிய அடையாளங்களை அணியும் மனிதர்கள் அருகி வருகின்றனர். குறிப்பாக ஆண்கள் தாடி வைத்துக்கொள்வது குறைந்து வருகிறது.

அரசின் கெடுபிடிகள் சமீப காலங்களில் அதிகரித்து வருவது பற்றி மனித உரிமை அமைப்புக்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்ற போதிலும் பாதிக்கப்பட்டவர்கள் தமது நிலைமைகளைச் சுதந்திரமாக எடுத்துச் சொல்ல மிகவும் அச்சப்படுவது தெரிகிறது. பெரும்பாலான மத வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகம் அரச சார்புடையவர்களின் கைகளிலேயே இருக்கிறது. இஸ்லாமிய பயங்கரவாதம் தலைதூக்கக் கூடாது என்பதில் அரசு மிகவும் கவனமாக இருக்கிறது.

நன்றி: விக்கிபீடியா

தரவு:

  • 2009 இல் நடத்தப்பட்ட கணிப்பின்படி, சீனாவில் 21.7 மில்லியன் (1.6%) முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.
  • முகம்மது நபியின் மறைவிற்கு 20 ஆண்டுகளுக்குப் பின்னர் (கி.பி.651) இஸ்லாம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • சீனா முழுவதிலும் 39,000 மசூதிகள் உள்ளன. இவற்றில் 25,000 சின்ஜியாங்கில் உள்ளன.
  • முதாலாவது மசூதி கி.பி. 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
  • 1954 மக்கள் புரட்சிக்குப் பின்னர்தான் சின்ஜியாங் சீனாவோடு இணைக்கப்பட்டது.
  • சீனா ஒரு மதசார்பற்ற நாடாக இருப்பினும் சீன மக்கள் அதிக மத நம்பிக்கை கொண்டவர்கள். பெரும்பாலானவர்கள்புத்த புத்த சமயத்தையும், சிலர் நாட்டார் வழக்குடையை மத நம்பிக்கைகளையுடையவர்களாகவும், தாயோயிசம், கொன்பூசியனிசம் போன்ற சித்தாந்த மரபுகளைப் பின்பற்றுபவர்களாகவும் உள்ளனர்.
  • சீனாவில் வேகமாகப் பரவி வரும் மதம் கிறிஸ்தவம் (வருடத்துக்கு 7% வளர்ச்சி)

 

 

 

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)