அமலா போல் நடிக்கும் ‘ஆடை’ | வயது வந்தவர்களுக்கு மட்டும்!

அமலா போல் நடிக்கும் அடுத்த படம் ‘A ‘ தரத்தையுடையதென (வயது வந்தவர்களுக்கு மட்டும்) முத்திரை குத்தப்பட்டுள்ளது.

சமீப காலங்களில் அவர் பெண்களை மையமாகக் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். ‘அதோ அந்தப் பறவை போல’, ‘ஆடை’, ‘கடவேர்’ ஆகியன இவற்றில் சில. இதில் ‘ஆடை’ படத்துக்கு தணிக்கை சபையினர் ‘A’ தர முத்திரை குத்தியிருப்பதாக அறியப்படுகிறது. ஆனாலும் தயாரிப்பாளர் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் ‘Arrogant ‘, ‘Audacious’, ‘Artistic’ போன்ற சொற்பதங்களின் மூலம் தமது சந்தைப்படுத்தும் சாதுரியத்தால் படத்தைப் பிரபல்யப்படுத்தி வருகிறார்கள்.

‘மேயாத மான்’ படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குனர் ரத்னகுமார் இப் படத்தை இயக்குகிறார். அமலா போல் விவேக் பிரசன்னாவுடன் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்கிறார். ஒளி, ஒலி விடயங்களை விஜே கார்த்திக் கண்ணா மற்றும் சாபிக் மொஹம்மத் அலி பார்த்துக்கொள்கிறார்கள்.

படம் இன்னும் சில வாரங்களில் திரைக்கு வரவுள்ளது.

Please follow and like us:
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)