அனந்தி சசிதரன் மீது பண மோசடிக் குற்றச்சாட்டு | விசாரணைக் குழு நியமனம்

முன்னாள் வட மாகாணசபை பெண்கள் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மீது செய்யப்பட்ட பண மோசடிக் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக விசாரிக்க மூவர் கொண்ட குழுவொன்றை வட மாகாண ஆளுனர் ரெஜினால்ட் கூறே நியமித்துள்ளார்.

இருதய மற்றும் சிறுநீரக வியாதிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வடமாகாண சபைக்கு வழங்கப்பட்ட நிதியில் மோசடி இடம்பெற்றுள்ளது என்று வட மாகாணசபையைச் சேர்ந்த திரு சீ.வீ.கே. சிவஞ்ஞானம் செய்த புகாரைத் தொடர்ந்தே இவ் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இவ் விசாரணை இரண்டு வாரங்களில் முடிவுறும் எனவும் அதைத் தொடர்ந்து வெளிவரும் அறிக்கையைப் பொறுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் ஆளுனர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.