த.தே.கூ. பிரித்தானிய அமைச்சர் சந்திப்பு

இலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியங்களுக்கான அமைச்சர் மார்க் பீல்ட் அவர்களுக்கும் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது. கடந்த அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளில் மாற்றம் உள்ளதாக தெரிவித்த இரா சம்பந்தன் அவர்கள் அது மாத்திரம் போதாது என்றும் வலியுறுத்தினார். மேலும் ஐ.நா.மனித உரிமை பேரவையின் தீர்மானங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன்

Read more

பொதுப் பணியாளர்கள் மத அடையாளங்கள் அணிவது தடை செய்யப்படலாம்- கியூபெக் மாகாண அரசு

ஒக்டோபர் 1ம் திகதி நடைபெற்ற கியூபெக் மாகாண அரச தேர்தலில் கோலிஷன் அவெனி கியூபெக் (Coalitions Avenir Quebec -CAQ) கட்சி 74 ஆசனங்களைப் பெற்று அபார வெற்றியைப் பெற்றது. 2011 இல் இருந்து இக் கட்சி தேர்தலில் போட்டியிட்டு வந்தாலும் இந்த தடவைதான் அது ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக இம் மாகாணத்தின் ஆட்சி லிபரல் மற்றும் கியூபெக்குவா கட்சி இரண்டுக்குமிடையேதான் மாறி வந்திருக்கிறது. CAQ கட்சியின்

Read more

புதிய கண்களூடு சிறீலங்காவைப் பாருங்கள் – சிறிசேன

புதிய கண்களூடு சிறீலங்காவைப் பாருங்கள் – மைத்திரிபால சிறீசேன உலகுக்கு அழைப்பு! சமீபத்தில் ஐ.நா. மனித உரிமை செயற்குழுவின் 73 வது அமர்வின்போது பேசிய சிறீலங்காவின் ஜனாதிபதி சர்வதேச சமூகத்துக்கு மேற்கண்ட அழைப்பை விடுத்தார். “இனங்களுக்கிடையேயான இணக்கம், ஜனனாயக சுதந்திரத்தின் மீளுருவாக்கம், மனித உரிமைகள் மற்றும் சட்ட ஒழுங்கு நிலைநாட்டப்பட்டமை போன்ற விடயங்களில் நாட்டில் முன்னேறம் ஏற்பட்டுள்ளது. சமாதானத்தை நிலைநாட்டவும் பொருளாதாரத்தை முன்னேற்றவும் நாம் எடுக்கும் முயற்சிகளைச் சர்வதேச சமூகம்

Read more

திருக்குறள் – மொழி மாற்ற வரலாறு 

சமீபத்தில் முக நூலில் ஒரு பதிவு வந்தது. ‘ கட்டாயம் பார்க்கவும்’ குறிப்போடு வந்த இப் பதிவைத் தாண்டிப் போக முடியவில்லை. அதில் ஒரு அறிவாளி பேசிக் கொண்டிருந்தார். நல்ல பேச்சு வன்மை மிக்கவர். விடயம் இதுவரை தமிழருக்குத் தெரியாத ஒன்று. பூடகமாக நகர்த்திச் சென்ற அவரது பேச்சு பிரசார வாடையுடன் இருந்தது. சாரம் இதுதான். “ஆங்கிலேயர் இந்தியாவைக் கைப்பற்றியதும் இங்குள்ள பிராமணர்கள் ‘தேவ பாஷை’ என்ற காரணத்தைக் காட்டி சகலவிதமான சமஸ்கிருத

Read more

Crazy Rich Asians / Chinese – Movie Review

இந்தப் படத்தை நேற்று குடும்பத்தோடு சென்று பார்த்தேன். அதை பற்றி எழுதவேண்டுமென்றளவிற்கு அது என்னைப் பாதித்திருக்கிறது. அப் பாதிப்பிற்குப் பல பரிமாணங்களுண்டு – ஒன்று அரசியல். இது ஒரு முற்று முழுதாக சீன நடிகர்களைக் கொண்டு – சரி 99% சீன நடிகர்களைக் கொண்டு – தாயாரிக்கப்பட்ட ஹொலிவூட் படம். எப்படி Black Panther முற்று முழுதாக ஆபிரிக்க-அமெரிக்க நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்படடதோ அந்தளவுக்கு  ஹொலிவூட்டில் வெள்ளையரல்லாத ஒரு இனத்தை வைத்து

Read more

மாயப் பெட்டி 

அறை – 1 நீண்டநாட்கள் மறைந்திருந்த அந்த nostalgia சங்கடம் கடந்த சில நாட்களாகத் தொல்லை தரத் தொடங்கி விட்டது. பல ஒளித்தட்டுக்கள் (ஒலியும் தான்)அடங்கிய பெட்டியொன்று ஒருநாள் என் மேசையில் குந்திக்கொண்டிருந்தது. விடயம் இதுதான். எனது நீண்டகாலத் தேட்டமும் இரண்டாவது மிக விருப்பமானதுமான (முதலாவது தமிழ், இலக்கியம், எழுத்து) electronic hobby and serious stuff பலதுக்கு இறுதி விடை கொடுத்து அனுப்பியது என் மனைவிக்கு நல்ல  சந்தோசம். தட்டுகள்

Read more

இளசுவின் மாறாட்டம்

இளசு எனப்படும் இளையராஜா கனடாவுக்கு வருகிறார், மன்னிக்க வேண்டும் கொண்டுவரப்  படுகிறார். சில இசை ரசிகர்களுக்குச் சந்தோசம் தான். அந்த சிலரை விட மீதிப் பேருக்கு பயங்கர கடுப்பு. இளசைப்பற்றி பல வருடங்களாகவே எனக்குள் அபிப்பிராய மோதல்கள் நிகழ்ந்து வருவது உண்மை. எண்பதுகளின் ஆரம்பத்தில் இவர் பங்குபற்றிய தமிழ்நாட்டு நிகழ்வொன்றில் (அப்போது இவரை வெளிநாட்டுக்கு கொண்டுவருமளவுக்கு தமிழ் வியாபாரிகள் வெளிநாடுகளில் இருக்கவில்லை) யாரோ மண்டபத்தின் பின்வரிசைகளிலிருந்து கூச்சல் போட்டதைச் சகிக்க

Read more

நரம்பின் மறை

விபுலானந்த சுவாமிகளின் தமிழ்த்தொண்டு இலங்கைத் தமிழருள் ஒரு பல்துறை வல்லுநர் என்ற வகையினருள் அடங்கக்கூடிய வெகு சிலருள் முதன்மை இடத்தைப் பெறுபவர் சுவாமி விபுலானந்தர். பொறியியல் (engineering), ஆங்கிலம், எண்ணியல் (mathematics) , இயற்பியல் (physics) , சோதிடம் (astrology), வானவியல் (astronomy), இசையியல் (music),  தாவரவியல் (botany), சங்க இலக்கியம் (sangam literature), கூத்தியல் (theatre ), வடமொழி (sanskrit)  என்று பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும் அவற்றையெல்லாம் தன் தமிழ் சார்ந்த, தமிழிசை சார்ந்த

Read more

2018ல் கதலீன் வின்னுக்கு பத்தாமிடத்தில் வியாழன்…

2018ல் கதலீன் வின்னுக்கு பத்தாமிடத்தில் வியாழன்… ஒன்ராறியோ மாகாண பொதுத் தேர்தல் 2018 இல் வரவிருக்கிறது. அரசியல்வாதிகளும் அரசியல்வாதிகளைப்போல் feel பண்ணுபவர்களும் உடலெல்லாம் பதாகைகளோடு வலம் வர ஆரம்பித்து விடடார்கள். கடை வாசல்களில் காவற்காரைப் போல் தவமாய் தவம் கிடந்து ஆதரவு கேட்கும் நிலையைப் பார்த்தால் பரிதாபமாகத்தான்  இருக்கிறது. இந்த தடவை கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் இருக்கிறது என்கிறார்கள். அதற்கு காரணம்  கொள்கைகள் இல்லை. தற்போதைய ஆளும் கட்சி மீதான, அதன்

Read more

வந்தோம், பார்த்தோம், கொலை செய்தோம்

துரும்பர் அவதரித்து விட்டார். விருப்பமோ விருப்பமில்லையோ வந்துதித்து விட்டார். இனி வணங்காமல் விட முடியாது. அவர் வரக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாகவிருந்தன  ஊடகங்கள். அவர் வரவே மாட்டார், இலக்கங்கள் அதைத்தான் சொல்கின்றன என்று செவிப்பறைகள் தகரச் சங்கூதின. அதையும் மீறி அவர் வந்து விட்டார். ஊடகங்கள் முட்டாக்குப் போட்டுக்கொண்டு கோடியால் ஓடி விட்டன. இதெல்லாம் அவர்களுக்குப் பழக்கப்பட்ட விடயம். உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டு மீண்டும் நெளிந்து கொண்டு முன்னால் வருவார்கள்.

Read more